2021-ஆம் ஆண்டுக்கான விடுமுறை லிஸ்ட் ஐ வெளியிட்ட தமிழக அரசு..!

2021 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

Last Updated : Oct 29, 2020, 11:42 AM IST
    1. தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களும் 2021 ஆம் ஆண்டு அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட வேண்டும்.
    2. தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
    3. மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டுக்கான விடுமுறை லிஸ்ட் ஐ வெளியிட்ட தமிழக அரசு..! title=

2021 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொதுத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களும் 2021 ஆம் ஆண்டு அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட வேண்டும். இதுதவிர, மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கைப்படி, பொது விடுமுறை நாளாக குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன், பின்வரும் 23 நாட்களும் 2021 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களாக கொள்ளப்படும். இதில், வங்கிகளுக்கான ஆண்டுக்கணக்கு முடிவு நாளான ஏப்ரல் 1 ஆம் தேதி, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

 

ALSO READ | கொரோனாவை வெற்றிக் கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 23 நாட்களில்.,

ஜனவரி 16 (உழவர் திருநாள்), ஏப்ரல் 25 (மகாவீர் ஜெயந்தி), மே 1 (மே தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி), டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ்) ஆகிய 6 அரசு விடுமுறைகள் வழக்கமான விடுமுறை. 

1 ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 1
2 பொங்கல் ஜனவரி 14
3 திருவள்ளுவர் தினம் ஜனவரி 15
4 உழவர் திருநாள் ஜனவரி 16
5 குடியரசு தினம் ஜனவரி 26
6 வங்கி ஆண்டு கணக்கு முடிவு ஏப்ரல் 1
7 புனித வெள்ளி ஏப்ரல் 2
8 தெலுங்கு வருடப்பிறப்பு ஏப்ரல் 13
9 தமிழ் புத்தாண்டு / அம்பேத்கர் ஜெயந்தி ஏப்ரல் 14
10 மகாவீர் ஜெயந்தி ஏப்ரல் 25
11 மே தினம் மே 1 
12 ரம்ஜான் மே 14
13 பக்ரீத் ஜூலை 21
14 சுதந்திர தினம் ஆகஸ்ட் 15
15 மொகரம் ஆகஸ்ட் 20
16 கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 30
17 விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 10
18 காந்தி ஜெயந்தி அக்டோபர் 2 
19 ஆயுத பூஜை  அக்டோபர் 14
20 விஜயதசமி அக்டோபர் 15
21 மீலாது நபி அக்டோபர் 19
22 தீபாவளி நவபர் 4
23 கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 

தினங்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. புனித வெள்ளி, ரம்ஜான், மொகரம், விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி ஆகியவை வெள்ளிக்கிழமைகளில் வருவதால், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை சேர்த்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

 

ALSO READ | Reminder!! மின் கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News