மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக உதவிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "கோவை மற்றும் நீலகிரியில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கவனம் துரிதநடவடிக்கை எடுத்து அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும். முக்கியமாக நீலகிரியில் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும்.
அதேபோல் கோவையிலும் மழை வெள்ளத்தால் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகிறது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து “இயன்றதை செய்வோம் இல்லாதவற்கே” என்ற கொள்கைப்படி நம்மால் முடிந்த உதவிகளை அந்த பகுதி மக்களுக்கு செய்திடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.