மூதாட்டியை தோசைக் கல்லால் அடித்துக் கொன்ற பேரன்!

மதுபோதையில் மூதாட்டியை தோசைக் கல்லால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 24, 2021, 09:50 AM IST
மூதாட்டியை தோசைக் கல்லால் அடித்துக் கொன்ற பேரன்!

செங்குன்றம்: மதுபோதையில் மூதாட்டியை தோசைக் கல்லால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொன்னேரி அருகே உள்ள பசுவன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் 72 வயதுடைய சுசீலா.  இவர் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  இவருக்கு 5 மகள்களும் ஒரு மகனும் உண்டு.  இவர்கள் அனைவரும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இவருடைய மகன் ரங்கநாதன் வயது 50, சென்னை வானகரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  இவருடைய மகன் ஜெகன் வயது 30, இவர் கடந்த 20ஆம் தேதி பசுவன் பாளையத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்று தங்கினார்.  நேற்று முன்தினம் இரவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஜெகன் பாட்டி இடம் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.  அவர் பணம் கொடுக்க மறுக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் முற்றி உள்ளது. 

paati

இதில் ஆத்திரமடைந்த ஜெகன் வீட்டில் இந்த தோசை கல்லை எடுத்து மூதாட்டி சுசீலாவை அடித்துள்ளார்.  இதில் பலத்த காயமடைந்த சுசிலா பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுபற்றி சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடி தலைமறைவான ஜெகனை தேடி வருகின்றனர்.  மதுவினால் இதுபோன்ற தொடர் கொலை சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News