பெரியார் சிலை தொடர்பான ஹெச்.ராஜாவின் முகநூல் பதிவு நடவடிக்கைக்கு பின்னால் மத்திய அரசின் தூண்டுதல் இருக்கலாம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்திலும் ஒரு நாள் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று எச் ராஜா தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவியது.
எச் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் எச் ராஜா பெரியார் சிலை உடைப்பு குறித்து தான் கருத்து கூறவில்லை என்றும் அது தன் அனுமதியின்றி தனது அட்மின் பதிவு செய்தார் என்று தெரிவித்த ராஜா, அதற்காக வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் பெரியார் சிலை தொடர்பான ஹெச்.ராஜாவின் முகநூல் பதிவு நடவடிக்கைக்கு பின்னால் மத்திய அரசின் தூண்டுதல் இருக்கலாம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பெரியார் சிலையை உடைப்பது தொடர்பாக முகநூலில் கருத்து தெரிவித்த பாஜகவின் H.ராஜா பின்னர் அதனை நீக்கியுள்ளார். தனது செயலுக்கு வருத்தமும் தெரிவித்துள்ளார். ஆனால் ராஜாவின் வருத்தத்தினை ஏற்க முடியாது. அவர் ஏன் இவ்வாறு கலக வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்பதனைக் கவனிக்க வேண்டும். இது தொடர்பாக மக்கள் சிந்திக்க வேண்டும்.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்கான நேரம் குறைந்து வருகிறது. அதில் இருந்து நமது கவனத்தை திசை திருப்பவே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகிறது என நினைக்கிறேன்.
பெரியார் பற்றி சிலர் கலக வார்த்தைகள் சொல்கிறார்கள். அந்த கலக வார்த்தைகள் ஏன் பேசப்படுகிறது என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பெரியார் சிலையை யாரும் தொட்டு விட முடியாது. பெரியாரை தமிழர்கள் பார்த்துக் கொள்வார்கள். பெரியார் உச்சம் மிக உயரமானது. அதை தொட்டு விட முடியாது.
பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு தேவையில்லை. பெரியார் பற்றி விமர்சனம் செய்பவர்களுக்குதான் பாதுகாப்பு தேவை. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
There is no need to deploy police for protection of #PeriyarStatue. We Tamilians will protect it.I feel that this issue is just to divert attention from Cauvery issue (formation of Cauvery management board): Kamal Hassan pic.twitter.com/88aZ7gHqcL
— ANI (@ANI) March 7, 2018