காவிரி விவகாரத்தில் குமாரசாமி யாரை சந்தித்தாலும், தமிழகத்திற்கு எந்த விளைவும் ஏற்படாது!!
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இதற்க்கு பல்வேறு தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில் எந்த பிரச்சனையும் இருக்காதது என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து, காவிரி விவகாரம் தொடர்பாக நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமி பிரதமரை சந்தித்து பேசினார்.
தற்போது தமிழக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது...!
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் குமாரசாமி பிரதமர் மட்டும் இல்லை, யாரை சந்தித்தாலும் அது வீண் தான். அது குமார சாமியாக இருந்தாலும் சரி, வேறு எந்த சாமியாக இருந்தாலும் சரி. காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக குமாரசாமி மட்டும் இல்லை இன்னும் எத்தனை சாமி இருந்தாலும் சரி, தமிழகத்திற்கு எந்த விளைவும் ஏற்படாது.
There is clear direction from SC on Cauvery row. HD Kumaraswamy meeting PM was a waste of time. Whether it is Kumaraswamy, Narayanasamy or some other Swamy, we have Cauvery management board & it is the ultimate Swami: D Jayakumar, Tamil Nadu Minister pic.twitter.com/2RhKZ29GMK
— ANI (@ANI) June 19, 2018
18 ம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அதிமுகவு-க்கு திரும்பி வருவது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.