அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 4, 2021, 02:35 PM IST
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் title=

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டிருப்பதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வட தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (3.1 கிலோமீட்டர் வரை) காரணமாக.,

ALSO READ | கனமழை காரணமாக ஆறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

04.11.2021: புதுக்கோட்டை மற்றும்டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

05.11.2021: டெல்டா மாவட்டங்கள், கடலூர், சேலம், ஈரோடு, நீலகிரி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

06.11.2021: டெல்டா மாவட்டங்கள், கடலூர், சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

07.11.2021: கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

08.11.2021: டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

 சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும், சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 

சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 13, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 9, மஹாபலிபுரம் (செங்கல்பட்டு), மண்டபம் (ராமநாதபுரம்), பாளையம்கோட்டை (திருநெல்வேலி) தலா 8, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமாரி), நாங்குநேரி (திருநெல்வேலி), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), டிஜிபி அலுவலகம் (சென்னை), மணிமுத்தாறு (திருநெல்வேலி), திருப்போரூர் (செங்கல்பட்டு) தலா 7, பேராவூரணி (தஞ்சாவூர்) 6, பாம்பன் (ராமநாதபுரம்), திருத்தணி (திருவள்ளூர்), கடம்பூர் (தூத்துக்குடி), ஆயக்குடி (தென்காசி), கடலூர் தலா 5, குழித்துறை (கன்னியாகுமாரி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), திருவாரூர் தலா 4, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), சோழவரம் (திருவள்ளூர்), வந்தவாசி (திருவண்ணாமலை) , புழல் (திருவள்ளூர்), சோலையார் (கோவை), குடவாசல் (திருவாரூர்), அண்ணா பல்கலைக்கழம் (சென்னை), சிதம்பரம் (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), சென்னை நுங்கம்பாக்கம் தலா 3 ஆகும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அரபிக்கடல் பகுதிகள் 04.11.2021 முதல் 06.11.2021 வரை: கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

05.11.2021 முதல் 07.11.2021 வரை: மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

08.11.2021: தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ | மழையை துல்லியமாக கணக்கிட உதவும் புதிய தொழில்நுட்பம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News