வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் தமிழக்கத்தில் கனமழை...

குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது! 

Last Updated : Nov 8, 2018, 04:03 PM IST
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் தமிழக்கத்தில் கனமழை... title=

குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது! 

குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; நேற்றுக் குமரிக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. குமரிக்கடல் பகுதியில் தற்போது நிலவி வரும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புஉள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஓரிரு இடங்களில்  இடியுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அதனால் மீனவர்கள் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24மணி நேரத்தில் அதிக அளவாக நாகப்பட்டினத்தில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இராமேஸ்வரத்தில் 6சென்டிமீட்டரும், வேதாரணியம், திருவைகுண்டம் ஆகிய இடங்களில் 5சென்டிமீட்டரும், பாம்பனில் 4சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. 

 

Trending News