NLC விபத்து: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் - அமித்ஷா

NLC அனல்மின் நிலைய விபத்தில் தொழிலாளர்கள் இறந்தது வேதனை அளிக்கிறது என அமித்ஷா வேதனை..!

Last Updated : Jul 1, 2020, 05:04 PM IST
NLC விபத்து: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் - அமித்ஷா title=

NLC அனல்மின் நிலைய விபத்தில் தொழிலாளர்கள் இறந்தது வேதனை அளிக்கிறது என அமித்ஷா வேதனை..!

நெய்வேலி NLC-யில் பாய்லர் வெடித்த விபத்தில் பலியான 6 பேர் குடும்பங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பாய்லர்கள் வெடித்து சிதறுவதும் உயிர் பலிகள் நிகழ்வதும் தொடருகின்றன. கடந்த மாதம் நடந்த பாய்லர் வெடிவிபத்தில் 4 பேர் பலியாகினர். இன்றும் பாய்லர் வெடித்து சிதறியதில் 6 பேர் பலியாகி உள்ளனர்.

இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... "நெய்வேலி விபத்தில் பணியாளர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது. இது தொடர்பாக அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்ய தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளேன். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

READ | NLC விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

இந்நிலையில், NLC அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்எல்சி அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்த 6 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் என்எல்சி அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொதிகலன் வெடி விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க உததரவிடப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

Trending News