அக்டோபர் இரண்டாம் தேதி தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தச் சூழலில் அன்றைய தேதி சமூக நல்லிணக்க பேரணி நடக்குமென்று திருமாவளவன் அறிவித்தார். அதற்கு நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன பேரணியில் கலந்துகொள்ள தயாராகின. ஆனால், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி ஆகியவற்றுக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த நவம்பர் 6ஆம் தேதி காவல் துறை அனுமதி அளிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அக்டோபர் 11ஆம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என்று மார்க்சிஸ்ட், சிபிஐ, விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கட்சிகள், 13க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் கூட்டறிக்கையில், "மாநிலத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்தும், அக்டோபர் இரண்டாம் தேதி அன்று அனுமதி வழங்க இயலாமைக்குரிய காரணங்கள் குறித்தும் காவல் துறையினர் விளக்கியதோடு, மனித சங்கிலி நிகழ்ச்சியைத் தள்ளி வைக்கும்படி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், ஆதரவு நல்கிய அனைத்துக் கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் தலைவர்களோடு தொலைபேசியின் ஊடாகக் கலந்து பேசியதன் அடிப்படையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் எதிர்வரும் அக்டோபர் 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் படிக்க | ஓசி பயணம் வேண்டாம் என பேசிய மூதாட்டி மீது வழக்கு பதிவு!
மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவுமான இந்த மனித சங்கிலி நிகழ்வில் அனைத்து ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் பங்கேற்று அப்போராட்டத்தை வெற்றிபெற வேண்டுமென அழைப்பு விடுக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata