”எனக்கு எதுவுமே தெரியாது” - ஜெயலலிதா சிகிச்சை குறித்து ஓபிஎஸ்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து எனக்கு எதுவுமே தெரியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Written by - Jegadish | Edited by - அதிரா ஆனந்த் | Last Updated : Mar 21, 2022, 01:24 PM IST
  • ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தெரியாது
  • ஜெயலலிதாவுக்கு என்ன உடல் உபாதைகள் இருந்தது என தெரியாது
  • என்ன சிகிச்சை வழங்கப்பட்டது என தெரியாது
”எனக்கு எதுவுமே தெரியாது” - ஜெயலலிதா சிகிச்சை குறித்து ஓபிஎஸ் title=

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இன்று காலை அவர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

மேலும் படிக்க | ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முதல்முறையாக ஆஜரான ஓபிஎஸ்! இளவரசியிடமும் விசாரணை!

அப்போது ”மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது ? எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரம் எனக்கு தெரியாது” என வாக்குமூலம் அளித்துள்ளார். கூடுதலாக ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் கூட எனக்கு தெரியாது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.

OPS Photo

சொந்த ஊரில் இருந்த போது நள்ளிரவில் உதவியாளர் மூலம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிப்பது தெரிய வந்ததாகவும், அடுத்த நாள் பிற்பகலில் அப்பல்லோ மருத்துவமனை சென்ற போது அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | குளிர்பானம் குடித்த மூதாட்டி உயிரிழப்பு : போலீஸார் விசாரணை..!

விசாரணை ஆணையம் அமைக்கக் கோரியது யார் என்ற ஆணையத்தின் கேள்விக்கு, பொது மக்களின் கோரிக்கை அடிப்படையிலேயே அமைக்கப்பட்டதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய் இருந்தது மட்டுமே தெரியும் என்றும் வேறு என்ன உடல் உபாதைகள் இருந்தது என்றும் தனக்கு தெரியாது என ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News