மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு இரண்டு வாரம் ஜெயில்..! உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் யாதவ்விற்கு இரண்டு வாரம் ஜெயில் தண்டனை பிறப்பித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Aug 3, 2023, 09:23 AM IST
  • மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் யாதவ்.
  • அதிமுக அட்சியில் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்தார்.
  • இவருக்கு 2 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு இரண்டு வாரம் ஜெயில்..! உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு! title=

கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக பணியாற்றியவர், பிரதீப் யாதவ். இவர், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக்கல்வித்துறையின் முன்னாள் செயலாளர் பிரதீப் யாதவ் IASற்கு,இரண்டு வாரம் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூத்த ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்கு..

திருநெல்வேலியை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர், பணப்பலன்கள் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது, இந்த உத்தரவிற்கு பிறகும், அதிகாரிகல் யாரும் இதற்குறிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னர் வழக்கு தொடர்ந்திருந்த ஞானப்பிரகாசம் மீண்டும் 2020ஆம் ஆண்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நடைப்பெற்று வந்ததை தொடர்ந்து, இது குறித்து முன்னாள் பள்ளிக்கல்வித்துறை செயலாளரும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான பிரதீப் யாதவ் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | டாஸ்மாக் திறக்கும் நேரம் மாற்றம்? - அமைச்சர் முத்துசாமி சொன்னது இதுதான்!

அதிருப்தி தெரிவித்த நீதிபதி..!

இந்த வழக்கை முன்னர் விசாரித்த நீதிபதி, மனுதாரர் வழக்கில் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்துவதற்கு பலமுறை வாய்ப்பளித்தும் அதை நிறைவேற்றாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி “ஒரு வழக்கில் தீவிர ஆலோசனை செய்த பின்னர்தான் ஐகோர்ட்டு ஒவ்வொரு வழக்கிலும் உத்தரவுகளை பிறப்பிக்கின்றது” என்று கூறினார். ஆனால் அந்த உத்தரவுகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்துவது இல்லை. கோர்ட்டு உத்தரவை அலட்சியப்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர் என்று அதிருப்தி தெரிவித்திருந்தார். இவர்களது இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து அவர் இந்த வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார். 

ஜெயில் தண்டனை..!

இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேற்கூறிய வழக்கிற்கான  விசாரணை நடைப்பெற்றது. இதில், மனுதாரர் வழக்கில் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தாதது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.   இதற்கு காரணமான அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அதிகாரி செயலாளர் பிரதீப் யாதவ், ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குனர் முத்து பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பூபாலா ஆன்டோ ஆகிய 3 பேருக்கும் 2 வாரம் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

அபராதத்தை செலுத்தாவிட்டால் கூடுதலாக மூன்று நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் இவர்கள் 3 பேரும் வருகிற 9-ந் தேதி அல்லது அதற்கு முன்பாக மதுரை ஐகோர்ட்டு பதிவாளரிடம் சரண் அடைய வேண்டும் என்றும் வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க | ஈஷா ஹோம் ஸ்கூலில் தடகளப் போட்டி... பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பங்கேற்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News