சென்னை: ஐ.ஐ.டி-எம் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 79 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் COVID-19 பரிசோதனை செய்த பின்னர், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தொடர்ந்து வகுப்புகள் தொடரலாமா என்பது குறித்து மாநில அரசு சுகாதார நிபுணர்களுடன் கலந்துரையாடி வருகிறது.
கல்வியாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில், டிசம்பர் 2 முதல் இறுதி ஆண்டு யுஜி மற்றும் பிஜி மாணவர்களுக்கு தமிழகத்தில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், சென்னை IIT-யில் ஏற்பட்டுள்ள தொற்றின் அதிகரிப்பு அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயர்கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், IIT-M-ல் தொற்று பரவி இருப்பதைப் பார்த்த பிறகு, கல்வி நிறுவனங்களால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இந்த அளவில் தொற்று பரவக்கூடுமோ என்ற அச்சம் உள்ளது. IIT-M மிகச்சிறந்த வகையில் பராமரிக்கப்படும் வளாகங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.
கல்லூரிகளால் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்க அதிகாரிகள் முழுமையாக கண்காணிப்பதும் கடினமாக இருக்கும் என்று கூறிய அவர், "ஒரு மாணவர் கூட வைரஸால் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அதிகாரிகள் மிகவும் கவனமாக இருந்தனர்" என்றார். சுகாதாரத் துறை (Health Department) அதிகாரிகளுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்த பின்னர், மாணவர்களுக்கு வகுப்புகளைத் தொடரலாமா அல்லது இயல்புநிலை மீட்கப்படும் வரை கல்வி நிறுவனங்களை மூடுவதா என்பது குறித்து அரசாங்கம் விரைவில் முடிவெடுக்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.
"முதல் முன்னுரிமை என்னவென்றால், இந்த மாதம் மீண்டும் திறக்கப்பட்ட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சோதிக்க குடிமை அதிகாரிகள் சுகாதார முகாம்களை அமைப்பார்கள்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ALSO READ: IIT Madras வளாகத்தில் lockdown: 66 மாணவர்களுக்கு COVID 19 தொற்று உறுதி
"கல்வி நிறுவனங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை அதிகமாக இருந்தால், அனைத்து கல்வி நடவடிக்கைகளும் அடுத்த உத்தரவு வரும் வரை இடைநீக்கம் செய்யப்படும்”. என்று அவர் கூறினார்.
அனைத்து நிறுவனங்களும் முகாம்களில் நிலையான இயக்க முறைமையை (SOP) கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கூறிய சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன், "எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் SOP-களை செயல்படுத்துவதில் குறைபாடு காணப்பட்டால், நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 25 IIT மாணவர்களின் சோதனை முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
யுஜி மற்றும் பிஜி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு எடுத்த முடிவை எதிர்த்து, உயர்கல்வி நிறுவன ஆசிரியர்களும் பணியாளர்களும், இயல்புநிலை இன்னும் திரும்பாததால் வகுப்புகளை நடத்துவது ஆபத்தானதாக இருக்கும் என்று கூறினர்.
"அனைத்து கல்லூரிகளிலும் பேராசிரியர்கள் தயார் நிலையில் இருந்தாலும், தற்போது, மாணவர்களுக்கு இந்த நேரத்தில் வகுப்புகள் எடுப்பது ஆபத்தானது. ஏனெனில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்துதான் உள்ளது, இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை” என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கூறப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் சுகாதார முகாம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) லேசான காய்ச்சல் இருந்த ஒரு விடுதி மாணவரின் மாதிரி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அவரது முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. IIT-யில் பரவியுள்ள தொற்றின் அளவைக் கண்டு அதிர்ச்சியின் உச்சியில் உள்ள குடிமை அதிகாரிகள், சுகாதார நடவடிக்கைகளை இன்னும் துரிதப்படுத்தியுள்ளன. விடுதிகளில் இருந்தவர்கள் உட்பட அனைத்து மாணவர்களையும் சோதிக்க கார்ப்பரேஷன் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒரு சுகாதார முகாமை அமைத்தனர்.
ALSO READ: Covid-19 தடுப்பூசி போடுவதற்கு முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR