சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... தலை மேல் டிவி விழுந்ததால் 3 வயது சிறுவன் பலி..!!

சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் எப்போதும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2020, 04:47 PM IST
  • சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் எப்போதும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
  • கொஞ்சம் தவறினாலும், வாழ் முழுவதும் அதற்காக வருத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.
சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... தலை மேல் டிவி விழுந்ததால் 3 வயது சிறுவன் பலி..!! title=

சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் எப்போதும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். கொஞ்சம் தவறினாலும், வாழ் முழுவதும் அதற்காக வருத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

அதற்கு சென்னையில் டிவி விழுந்ததால் பலியான 3 வது குழந்தை உதாரணம். பெற்றோர்கள் மிகவும் கவனத்துடன் எச்சரிக்கையுடம் இருக்க வேண்டும்.

சென்னையில் (Chennai) தாம்பரத்தில், அன்னை சத்யா நகரில் வசிப்பர் பாலாஜி. அவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். அவரது இரண்டாவது குழந்தை தான் கவியரசு. அவருக்கு வயது மூன்று.

அவர்களது வீட்டில் டிவி கான்க்ரீட்டினால் ஆன செல்ஃப் மீது வைக்கப்பட்டிருந்தது. பாலஜி அவர்கள் அந்த டீவிக்கு அருகே உள்ள ப்ளக் ஒன்றில் மொபைலை சார்ஜ் செய்திருந்தார்.

அப்போது மொபைலில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது, அந்த மொபைலை எடுக்க அந்த சிறுவன் முயன்றுள்ளான். அவர் சார்ஜரில் உள்ள வயரை நீக்காமல் மொபைலை எடுத்ததால், வயரில் மாட்டிக் கொண்ட டிவி (TV), மொபைல் ஃபோனுடன் கீழே விழுந்தது.

ALSO READ | ஸ்டெர்லைட் ஆலை மூடல் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு முக்கிய மைல்கல்- ராமதாஸ் அறிக்கை..

டிவி குழந்தையின் தலையின் மேலே விழுந்ததால், அந்த குழந்தை இறந்தது.

சமையல் அறையில் வேலையாக இருந்த அந்த குழந்தையின் தாயார், சத்தம் கேட்டு ஓடோடி வந்தார். குழந்தையின் தலையில் இருந்து ரத்தம் கொட்டுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார், 

உடனே குழந்தையை கிரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கே மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ALSO READ |தமிழகத்தில் ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ் விநியோகம்...!

சேலையூர் போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மருத்துவர்கள் கருத்து தெரிவித்த போது, பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருந்தால், இது போன்ற விபத்துக்களை தவிர்க்கலாம் என்றார். மர சாமன்கள் மீது ஏறுவது, வயர்களை பிடித்து இழுப்பது, எலக்ட்ரிக் உபகரணத்தில் உள்ள ஆபத்துக்கள் இவை எல்லாம் கருத்தில் கொண்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றர். கனமான சாமான்களை வைக்கும் போது, அது எந்த நிலையில் கீழே விழாமல் இருக்கும் வகையில் வைக்க வேண்டும் என கூறினார். 

இப்பொழுது, அந்த குழந்தையின் பெற்றோர்கள், தங்கள்  அஜாக்கிரதையினால், குழந்தையை பறிகொடுத்து விட்டு, வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன், சோகத்துடன் காலம் தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

Trending News