பிளஸ்-1 தேர்வும் அரசு பொதுத்தேர்வு ஆகிறதா?

Last Updated : Apr 28, 2017, 09:46 AM IST
பிளஸ்-1 தேர்வும் அரசு பொதுத்தேர்வு ஆகிறதா? title=

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகளை போல பிளஸ்-1 தேர்வையும் அரசு பொதுத்தேர்வாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. 

பள்ளிகளில் இதுவரை 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகள் மட்டுமே அரசு பொதுத்தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ்-1 தேர்வு சாதாரண தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. சில பள்ளிகளில் பிளஸ்-1 பாடங்கள் நடத்தாமல், பிளஸ்-1 வகுப்பில் பிளஸ்-2 பாடங்களை நடத்துவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவ படிப்பில் சேர அகில இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வு அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற அனுப்பப்பட்டுள்ளது. மே 7-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. அதற்குள் தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும்.

எனவே நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில் பாடங்களிலிருந்து கேட்கப்படும் என்பதால் பிளஸ்-1 தேர்வை அரசு பொதுத்தேர்வு என்று அறிவித்தால்பிளஸ்-1 பாடங்களை படிப்பார்கள் என்று அரசு கருதுகிறது. 

எனவே பிளஸ்-1 தேர்வை பொதுத்தேர்வாக அறிவிக்க அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Trending News