திருமணம் ஆகா மகள்களை பராமரிக்க வேண்டியது தந்தையின் கடமை: HC

திருமணம் ஆகும் வரை மகள்களை பராமரிக்க வேண்டியது தந்தையரின் கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது!

Last Updated : Jun 24, 2019, 11:30 AM IST
திருமணம் ஆகா மகள்களை பராமரிக்க வேண்டியது தந்தையின் கடமை: HC title=

திருமணம் ஆகும் வரை மகள்களை பராமரிக்க வேண்டியது தந்தையரின் கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது!

சுமார் 18 வயது இளம் பெண் ஒருவர் தன்னுடைய தந்தை மாதந்தோறும் பராமரிப்புத் தொகை தர உத்தரவிடக்கோரி குடும்பநல நீதிமன்றத்தை அணுகினார். தன்னுடைய கல்விச் செலவுகளை தானே பார்த்துக் கொள்ள முடியவில்லை என்பதை காரணம் காட்டி அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த குடும்பநல நீதிமன்றம் இளம்பெண் மேஜர் என்பதாலும், மனநலம் பாதித்தவரோ அல்லது உடல் ஊனமுற்றவரோ அல்ல என்பதாலும், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து அந்த இளம்பெண் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-ஆவது பிரிவுடன், இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் 20ஆவது பிரிவையும் இணைத்து பார்க்கும்போது, 18 வயதுக்கு மேற்பட்ட பெண் என்றாலும், திருமணமாகும் வரை மகளை பராமரிக்க வேண்டிய கடமை தந்தைக்கு இருப்பதை இளம்பெண்ணின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டி வாதிட்டுள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125ஆவது பிரிவு, பிள்ளைகள் மைனராக இருக்கும்வரை மட்டுமே பராமரிப்பது பற்றி வரம்பிடுகிறது என்றாலும், மகள்களுக்கு திருமணம் ஆகும்வரை தந்தை பராமரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே நீதிமன்றங்கள் தொடர்ந்து எடுத்து வந்துள்ளதை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சுட்டிக்காட்டினார். இதைத் தொடர்ந்து, குடும்பநல நீதிமன்றத்தில் இளம்பெண் புதிதாக மனு தாக்கல் செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

Trending News