தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம்: செங்கோட்டையன்...!

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளதால் முதல்வரிடம் ஆலோசித்த பிறகே பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்படும்..! 

Last Updated : Jul 1, 2020, 12:23 PM IST
தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம்: செங்கோட்டையன்...! title=

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளதால் முதல்வரிடம் ஆலோசித்த பிறகே பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்படும்..! 

 தற்போதைய சூழலில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என கோபிச்செட்டிபாளையம் அருகே அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். மேலும் 12 ஆம் வகுப்பு முடிவுகளை வெளியாவதில் சிக்கல் உள்ளது எனவும் கூறினார். ஜூலை முதல் வாரத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் என ஏற்கனவே கூறியிருந்தார். முதல்வரிடம் ஆலோசித்த பிறகே 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு பற்றி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அம்மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. 

READ | Good News!! வாங்குவதில் தாமதம் வேண்டாம்... ரூ. 40 ஆயிரம் விலை குறைந்த ஐபோன்!!

இந்நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் கிட்டத்தட்ட முடிவடைந்து அதன் தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்ட நிலையில் மிக விரைவில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது, பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை அறிவிப்பதில் சிக்கல் இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில்.... தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். ஜூலை 1 முதல் வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. முதலமைச்சரிடம் ஆலோசித்த பிறகே 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்து அறிவிக்கப்படும்" என அவர் தெரிவித்துள்ளார். 

Trending News