நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்... -கமல்!

‘மக்கள் மத்தியில் வெளிச்சம் கொண்டு வர நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்’ என மோடியின் இன்றைய அறிவிப்பை விமர்சித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்.

Last Updated : Apr 3, 2020, 08:59 PM IST
நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்... -கமல்!

‘மக்கள் மத்தியில் வெளிச்சம் கொண்டு வர நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்’ என மோடியின் இன்றைய அறிவிப்பை விமர்சித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்.

முன்னதாக இன்று காலை நாட்டு மக்களிடையே தொலைகாட்சி வாயிலாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி ஞாயிற்று கிழமை இரவு 09.00 மணி துவங்கி 09 நிமிடங்கள் மின் விளக்குகளை அணையுங்கள். அதன் போது பல்ப்புகளை அணைத்து விட்டு வீட்டில் மெழுகுவர்த்தி, அகல்விளக்குகளை ஏற்றுங்கள்; டார்ச் லைட் அல்லது செல்போன் மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும். 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களைப் பற்றி சிந்தியுங்கள்." என அறிவித்தார். 

முன்னதாக கடந்த மார்ச் 22-ஆம் தேதி மக்கள் ஊரடங்கின் போது கைத்தட்டி மருத்து ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்ட நிலையில், தற்போது மீண்டும் மக்களிடையே 9 நிமிடம் மின்விளக்கை அணைக்க கூறியுள்ளார். பிரதமரின் அறிவிப்புக்கு பின்னால் உள்ள ரகசியம் என்னவென்று அறியாத நிலையில், அவரது அறிவிப்புகள் தற்போது இணையத்தில் மீம்ஸ் உதவியால் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள், நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே இப்போது தான் பிரதமர் வந்துள்ளார் என்று விமர்சித்துள்ளார். இத்தொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிடுகையில்., "பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்." என குறிப்பிட்டுள்ளார்.

More Stories

Trending News