கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் இரு தினங்களுக்கு முன்பு குறவர் இனத்தைச் சேர்ந்த சிறுவன் உட்பட 3 பேரை பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஓட்டுனர் நெல்சன் நடத்துனர் ஜெயதாஸ் ,திருவட்டார் பணிமணை மேலாளர் அணீஷ் பணிநீக்கம் செய்யபட்ட நிலையில் அதிகாரிகளின் விசாரணையில் நரிகுறவர்கள் பேருந்தில் சண்டையிட்டதால் இறக்கிவிடபட்டது தெரியவந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட மூன்று பேரும் மீண்டும் பணியில் சேர்ப்பு.
ALSO READ | அரசு பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - நடத்துனர் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நரிக்குறவர்களான கணவன் மனைவி பேருந்தில் குடிபோதையில் தகாத வார்த்தைகளால் தகராறு செய்ததால் பயணிகள் எதிர்ப்பால் பஸ்சில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் வைரலானது. இன்னிலையில் முழு விசாரணை நடைபெறாமல் நடத்துநர், ஓட்டுநர், திருவட்டாறு பணிமனை கிளை மேலாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்,பொது மேலாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது அரசு தரப்பிலும் போக்குவரத்து அதிகாரிகளின் முழு விசாரணையில் பேருந்தில் இறக்கி விடப்பட்ட நரிக்குறவர்கள் மீது பல்வேறு குற்ற சம்பவங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
வடசேரி பஸ் நிலையத்தில் படுத்து உறங்கிய போது சம்பந்தப்பட்ட நரிக்குறவர்கள் இடையே விருப்ப தகாத சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி தாகவும், மேலும் இந்த நரி குறவர் கடந்த இரு ஆண்டுகள் முன்பு தனது மருமகனை அடித்து கொன்ற வழக்கு, பெண் கடத்தல் வழக்கில் உள்ளதாக அரசிற்கு தகவல் சென்றதை அடுத்து சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துனர், கிளை மேலாளர் மற்றும் பொதுமேலாளர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மண்டல உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போக்குவரத்து அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளிவரும் காட்சிகள் அடிப்படையில் முடிவு எடுக்காமல் முழு தகவலையும் தெரியவந்த பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR