கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களை பிடித்து முன்னிலையில் உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடி வருகின்றனர்.
திருவள்ளூரில் மக்களுக்கு இனிப்பு வழங்கிய தொண்டர்கள்
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருவள்ளுர் வடக்கு வட்டார தலைவர் ஈகை.ஜோஷி தலைமையில் ஈக்காடு பகுதியில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதில் மாவட்ட துணைத் தலைவர் அன்பழகன் கேளம்பாக்கம் சிவகுமார் பொதுச் செயலாளர் தேவேந்திரன் விநாயகம் சிவக்குமார் பொன்ராஜ் ரமேஷ் 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் களைக்கட்டிய கொண்டாட்டம்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை வரவேற்று தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த விழா, தூத்துக்குடி தபசுமண்டபம் அருகில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைப்பெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் ஏராளமான காங்கிரஸார் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மேலும் படிக்க | Karnataka CM Contest: சித்தராமையாவே முதலமைச்சர்! உரக்க ஒலிக்கத் தொடங்கும் குரல்கள்
இராமநாதபுரத்தில் நடனமாடி கொண்டாட்டம்..
இராமநாதபுரத்தில், கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் வெற்றியை அக்கட்சியின் தொண்டர்கள், பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி நடனம் ஆடி கொண்டாடினர்.
இராமநாதபுரம் நகர் காங்கிரஸ் சார்பில் அரண்மனையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடினர். முன்னதாக அரண்மனையில் இருந்து டிரம்ஸ் வாசிப்புடன் நடனம் ஆடி செண்டர் பிளாக் வரை ராகுல் காந்தி வாழ்க, காங்கிரஸ் கட்சி வளர்க, வருங்கால பிரதமர் ராகுல்காந்தி என்று மகிழ்ச்சி முழக்கங்களை எழுப்பி சென்றனர். இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்
ஈரோட்டில் மேளதாளத்துடன் கொண்டாட்டம்
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் ஈரோட்டில் அக்கட்சியினரின் தலைமையில் வெற்றிக்கொண்டாட்டம் களைகட்டியது. இந்த நிகழ்ச்சி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தலைமையில் நடைப்பெற்றது. இதில், பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.இதேபோல் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மணல் மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கர்நாடகா காங்கிரஸ் வெற்றியை நிர்வாகிகள் கொண்டாடினர்.மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேளதாள இசையுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.
அரியலூர்
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி தற்போது வரை, 135 இடங்களை பிடித்து முன்னிலையில் உள்ள நிலையில் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
காங்கிரஸ் கட்சியின் வெற்றி திட்டவட்டமாக உறுதியான நிலையில் இந்திய முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் தங்களது மகிழ்ச்சியை பல்வேறு விதத்தில் வெளிப்படுத்தி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். காங்கிரஸிற்கு அடுத்தபடியாக பாஜக 64 இடத்திலும், மதசார்பற்ற ஜனதா தளம் 22 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் 3 இடங்களிலும் பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி ஊர்ஜிதமான நிலையில் இதனை கொண்டாடும் விதமாக ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் பட்டாசு வெடித்து இருசக்கர வாகனங்கள் சென்ற பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் 30-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | Karnataka CM Contest: சித்தராமையாவே முதலமைச்சர்! உரக்க ஒலிக்கத் தொடங்கும் குரல்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ