கரூர் அடுத்த ராயனூர் பகுதிக்கு உட்பட்ட தில்லைநகரை சேர்ந்தவர் கற்பகம் (29) இவர் தனது மாமியார் மற்றும் தனது மூன்று குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயில் முன்பு திடீரென அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணிடம் போராட்டம் குறித்து கேட்ட பொழுது, ராயனூர் தில்லை நகரில் தனது கணவர் அருண்குமார் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும், இவரது கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த வேளையில் கணவரின் நண்பர் கமல் என்பவர் வீட்டிற்கு வந்த பொழுது, தான் குளித்துக் கொண்டிருக்கும் போது செல்போனில் படம் எடுத்து விட்டதாக கூறி, அதை பிறர் யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி பணம் கேட்டதாக கூறினார்.
மேலும் படிக்க | குடித்துவிட்டு பேருந்து ஓட்டினால்.... போக்குவரத்து கழகத்தின் எச்சரிக்கை
மேலும், அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் கடன் வாங்கி சுமார் 50 ஆயிரம் வரை பணம் கொடுத்தும், மீண்டும் மீண்டும் வீடியோவை வைத்து மிரட்டி வருவதாகவும், எனவே அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது உயிருக்கும், குழந்தைகளின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு தர வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அங்கிருந்து தன் குழந்தைகளுடன் எழுந்து சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க | கோவையில் பந்த்; ஆனா அது அண்ணாமலைக்கே தெரியாது - பாஜக துணை தலைவர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ