பொதுமக்கள் அவசர தொடர்புக்கு காவலன் Dial 100 செயலி அறிமுகம்!!

பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள KAVALAN Dial 100 ஆப் அறிமுகம்!!

Last Updated : Jun 4, 2018, 01:39 PM IST
பொதுமக்கள் அவசர தொடர்புக்கு காவலன் Dial 100 செயலி அறிமுகம்!! title=

பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள KAVALAN Dial 100 ஆப் அறிமுகம்!!

தமிழகத்தில், சமீபகாலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள தொடந்து அதிகரித்து கொண்டே இருக்கின்றனர். இந்த சம்பவத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது மட்டும் இன்றி பயத்துடனும் இருக்கின்றனர். 

இது தொடர்பாக என்னதான் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும், விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மக்களிடம் இருக்கின்ற பயமானது மாறாத நிலையில் தான் இருக்கின்றது. 

இதையடுத்து, பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள KAVALAN Dial 100 என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளனர். KAVALAN Dial 100, KAVALAN SOS என்ற இரண்டு செல்போன் செயலியை இன்று தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி! 

மேலும், KAVALAN Dial 100, KAVALAN SOS இந்த செயலிகள் மூலம் மக்கள் நேரடியாக மாநில தகவல் தலைமை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

Trending News