பொது மக்களை அவமதிப்பதாக புகார் எதிரொலியை தொடர்ந்து யாரையும் ‘டா’ , ‘டி’ போட்டு போலீசார் அழைக்க கூடாது என கேரள ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவனந்தபுரம்: பொது மக்களை ‘டா’ , ‘டி’ போட்டு அழைக்க கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரள போலீசார் கடந்த சில மாதங்களாகவே பொதுமக்களிடம் அவமரியாதையாக நடந்து கொள்வதாக ஏராளமான புகார்கள் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சூர் சேர்ந்த அனில் என்பவர் கேரள உயாநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் அவர் கூறியதாவது “நான் திருச்சூரில் கடை நடத்தி வருகிறேன். ஏன்னையும், எனது மகளையும் கடையை பூட்ட சொல்லி போலீசார் ஆபாசமாக திட்டினர். இது பொதுமக்கள் மத்தியில் எனக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி தேவன் ராமசந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், சமீப காலமாக கேரள போலீசார் மீதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்களிடம் போலீசார் மிக மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். அனைவரையும் குற்றவாளிகள் என நினைத்து நடந்து கொள்ள கூடாது. பொது இடங்களில் யாரையும் டா, டி போட்டு அழைக்க கூடாது. இது தொடர்பாக டிஜிபி அனைத்து போலீசாருக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறினார். கேரள மாநிலத்தில் மட்டும் இன்றி தமிழகத்தில் இது போன்ற புகார்கள் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR