திருப்பூரைச் சேர்ந்த பாண்டியராஜ், நடராஜன், குப்புசாமி, ராமசாமி ஆகிய 3 பேரும் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி கேரள மாநிலம் வாளையாருக்கு உறவினரைச் சந்திக்கச் சென்றுள்ளனர். அப்போது கேரளாவின் ஓணம் சிறப்பு பம்பர் லாட்டரியை வாளையாறில் வாங்கியுள்ளனர். அந்த லாட்டரியின் முதல் பரிசு 25 கோடி ரூபாய் இவர்களுக்கு விழுந்தது. ஆனால் பம்பர் லாட்டரி பணம் உடனடியாக இவர்களுக்கு கிடைக்கவில்லை. தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பிளாக் மார்க்கெட்டில் திருப்பூரைச் சேர்ந்த 4 பேரும் லாட்டரி சீட்டை வாங்கியதாக கேரள லாட்டரித் துறையிடம் புகார்கள் சென்றது. இதனையடுத்து 25 கோடி ரூபாயில் வரி பிடித்தம் போக 17 கோடி ரூபாய் பரிசுத் தொகை நிறுத்தி வைக்கப்பட்டது. அவர்களுக்கு கேரள பம்பர் லாட்டரி கொடுப்பது சட்டவிரோதமானது என்றும் எதிர்ப்புகள் கிளம்பின.
இது குறித்து லாட்டரி பரிசு வென்ற பாண்டியராஜ் பேசும்போது, திருப்பூரில் பல ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறேன். வாளையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உறவினரை எனது நண்பர்கள் நடராஜன், குப்புசாமி, ராமசாமி ஆகியோருடன் சந்திக்கச் சென்றேன். அவர்களை சந்தித்த பிறகு மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது, ஒரு லாட்டரி சீட்டு கடையை கண்டுபிடித்து, சில டிக்கெட்டுகளை வாங்க முடிவு செய்தோம்.
மேலும் படிக்க | லாட்டரி மாட்டின்க்கு சொந்தமான ரூ.451 கோடி சொத்துக்கள் முடக்கம்!
ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 500. பரிசு பெரியதாக இருந்ததால், ஐந்து டிக்கெட்டுகளை வாங்கினோம். செப்டம்பர் 20 அன்று, எங்களின் டிக்கெட்டுகளில் ஒன்று (TE230662) பம்பர் பரிசான ரூ.25 கோடிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றிய மகிழ்ச்சியான செய்தி எங்களுக்கு கிடைத்தது. உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு மறுநாள் திருவனந்தபுரம் சென்றோம். ஆதார் அட்டை மற்றும் பிற விவரங்களுடன் எங்கள் கோரிக்கையை கேரள லாட்டரி துறையிடம் சமர்ப்பித்தோம்.
எங்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் 20 நாட்களுக்கு மேலாகியும் அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. தமிழகத்தில் பிளாக் மார்க்கெட் மூலம் டிக்கெட் வாங்கியதாக சிலர் புகார் அளித்தது தெரிய வந்தது. நாங்கள் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுவோம் என்று அஞ்சினோம். இறுதியாக, கேரள அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று, முகவர் கமிஷன் மற்றும் பிற உள்ளூர் வரிகளைக் கழித்து, எங்கள் கணக்கில் ரூ.17 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. நாங்கள் அதை எங்களுக்குள் பகிர்ந்து கொள்வோம்" என தெரிவித்தார்.
பரிசுத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தை விளக்கிய மாநில லாட்டரிகள் இயக்குநரகத்தின் (கேரளா) அதிகாரி ஒருவர், “கேரளாவில் லாட்டரி சீட்டுகளை விற்கவும் வாங்கவும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் பல மாநிலங்களில் அனுமதி இல்லை” என்றார். தமிழகத்திலிருந்து வெற்றி பெற்றவர்கள் அசல் ஆவணங்களுடன் டிக்கெட்டைச் சமர்ப்பித்தனர். அவர்கள் கேரள வருகைக்கான காரணத்தை அவர்களிடம் கேட்டோம், அதற்கான காரணத்தையும் சொன்னார்கள். அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் மாநில லாட்டரி இயக்குனரகத்தின் கண்காணிப்புக் குழுவால் பரிசீலிக்கப்பட்டது. ஆய்வுக்குப் பிறகு, காரணங்கள் சரியானவை எனக் கண்டறியப்பட்டு பரிசுத் தொகை டெபாசிட் செய்யப்பட்டது.
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் வைத்திருப்பது குறித்து திருப்பூர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழ்நாடு கேரளாவுக்கு மிக அருகில் உள்ளது. மேலும் ஏராளமானோர் அந்த மாநிலத்திற்கு அடிக்கடி வந்து லாட்டரி சீட்டுகளுடன் திரும்பிச் செல்கின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட டிக்கெட்டுகளை அவர்கள் வாங்கியதாக தகவல் கிடைத்தது. ஆனால், கேரள அதிகாரிகள் எந்த புகாரும் அளிக்கவில்லை." என தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எம்.சுந்தரேசுவரன் கூறுகையில், ''தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. லாட்டரி சீட்டு வைத்திருக்கும் எவரும் தமிழகத்தில் கைது செய்யப்படலாம். ஆனால், முடிவுகள் அறிவிக்கப்படாத ‘லைவ்’ டிக்கெட்டுகளை ஒருவர் வைத்திருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும். கேரளா எங்களுக்கு மிக அருகில் இருப்பதால் லாட்டரி சீட்டு வாங்க ஏராளமானோர் எல்லை தாண்டி செல்கின்றனர். மேலும், லாட்டரி சீட்டு வைத்திருப்பதற்காக கேரளாவில் இருந்து வரும் ஒவ்வொரு நபரின் சாமான்களையும் சரிபார்ப்பது நடைமுறையில் இல்லை." என கூறினார்.
மேலும் படிக்க | ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் மதுரை! உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ