திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து கோடை இளவரசியை ரசித்து விட்டது செல்வது வழக்கம். பறந்து விரிந்த மலைகள், பசுமையை போர்த்திய பள்ளத்தாக்குகள், மேக கூட்டங்கள், புல்வெளிகள், குகைகள் போன்றவை கொடைக்கானலின் முக்கிய அடையாளங்களாகும்.
இதேபோல் கோடை காலத்தில் நிலவும் குளிர் மற்றும் மிதமான வெப்பம், விட்டு விட்டு பெய்யும் மழை உள்ளிட்ட காலநிலை பெரும்பாலான சுற்றுலா பயணிகளை ரசிக்க வைக்கிறது. இதனால் கொடைக்கானல் வரும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனையும், அதனைப் பயன்படுத்துவோரின் போக்கு அதிகரித்து வந்தது.
வனப்பகுதிகளில் இயற்கையாக கிடைக்கக்கூடிய ஒரு வகை காளானை தான் போதைக் காளான் என்கின்றனர். ''சிலோசைப்பின்'' என்கிற போதை தரும் வேதிபொருள் இந்த வகை காளான்களில் இருப்பதால் கறுப்பு பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது கொடைக்கானல் போதைக் காளான். இதனை சாப்பிடுபவர்களுக்கு போதை 8 மணி நேரம் வரை நீடித்திருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | உயிருக்கு எமனாகும் உலகின் மிக ஆபத்தான 5 போதை பொருட்கள்..!!!
குறிப்பாக கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளான வட்டக்கானல், பெரும்பள்ளம், வில்பட்டி, மன்னவனூர் பகுதிகளில் போதைக் காளான் விற்பனை அதிகம் நடைபெறும் இடம். இதுபோன்ற சட்டவிரோத விற்பனையை தடுத்து நிறுத்த கொடைக்கானல் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
இதன் காரணமாக சற்றே அடங்கியிருந்த போதைக் காளான் விற்பனையாளர்கள் தற்போது மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ளனர். கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதைக் காளான்கள் மற்றும் கஞ்சா அதிகளவில் விற்கப்படுவதாகவும், அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று போதைக் காளான்கள் பறித்து வீட்டில் வைத்து விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில், மதுரை வனத்துறை தனிப்படை குழு மற்றும் மன்னவனூர் வனசரகத்திற்கு உட்பட வனத்துறையினர் மன்னவனூர் கிராமத்தில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க | கொடைக்கானலில் பிரபலமாகும் ‘போதை காளான்’; அதிர்ச்சி தகவல்!
அப்போது சுற்றுலா பயணிகளிடம் உள்ளூரை சேர்ந்த சிலர் போதைக் காளான்களை பற்றி பேசியதை கண்டுபிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். அவர்களின் வீடுகளில் மேற்கொண்ட சோதனையில் சுமார் ரூ.10,000 மதிப்பிலான போதைக் காளான் பாதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இவற்றை பறிமுதல் செய்த போலீசார் கூக்கால் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன்(55), மன்னவனூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(37) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் போதைக் காளான்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | ஐபிஎல் இலவசமாக பார்க்க ஜியோவின் எந்த பிளானை ரீச்சார்ஜ் செய்யலாம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR