திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களை திருச்செங்கோட்டில் சந்தித்தார். அப்போது பேசிய அவர், " பிப்ரவரி நாலாம் தேதி பெருந்துறையில் கொங்கு மண்டல எழுச்சி மாநாடு நடத்த உள்ளோம். மாநாட்டின் சிறப்பு நிகழ்வாக 16 ஆயிரம் பெண்கள் ஒன்றாக வள்ளி கும்மி அரங்கேற்றுகின்ற உலக சாதனை நிகழ்ச்சியும் அங்கே நடத்துகின்றோம். இவ்வளவு பேர் ஒரு இடத்திலே பாரம்பரிய நடனத்தை இந்தியாவில் எங்கும் நடத்தியது கிடையாது.
திருச்செங்கோட்டிற்கு கண்ணகி கோட்டம் வேண்டும். நானும் சட்டமன்றத்தில் பேசி அந்த அறிவிப்பு வரக்கூடிய நிலையிலே சிறிது தாமதமாகி போனது. திருச்செங்கோடு மக்களின் முக்கிய தேவையாக இருந்த திருச்செங்கோட்டில் சுற்றுவட்ட பாதை புறவழிச் சாலை பணிகள் துவங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றன. சென்ற சட்டமன்றத் தேர்தலின் போது திருச்செங்கோடு மலைக்கு ரோப் கார் போடப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து பல முயற்சிகள் செய்தோம்.
மேலும் படிக்க | திமுகவில் இருந்தவர் திருமாவளவன், விசிக கூட்டணி உறுதி - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
அது சாத்தியமில்லை என்று தெரிந்த பின்னால் வல்லுனர் குழு ஆராய்ந்து சாத்தியமில்லை என்று அறிவித்த பின்னால், மாற்று சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கையை சொல்லி இப்பொழுது சென்னையில் இருந்து நெடுஞ்சாலைத்துறை குழு வந்து ஆய்வு செய்திருக்கிறார்கள். சாலை அமைக்கக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக நான் அறிகின்றேன். வெகு விரைவில் அதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கின்றேன். அதேபோல நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்லூர் பகுதியில் நட்டாற்றீஸ்வரன் கோவில் உள்ளது ஈரோடு பகுதியில் இருந்து அந்த கோவிலுக்கு ஆற்றின் நடுப்பகுதி வரை சாலை வருகிறது. ஆனால் நாமக்கல் பக்கம் இருந்து சாலை கிடையாது அந்த மீதம் இருக்கிற பாதி சாலையை பட்லூர் பகுதியில் இருந்து போட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறேன்.
அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் அது இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. திருச்செங்கோட்டில் மட்டுமல்ல கொங்கு மண்டலம் முழுவதும் விசைத்தறிகள் அதிகமாக இருக்கின்றன விசைத்தறி தொழில் பாதுகாப்பதற்காக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை பாதியாக அரசு குறைத்து. அந்த தொழில் நடப்பதற்கான வழி வகையை செய்திருக்கிறது. இலவச வேட்டி சேலை, பள்ளி சீருடைகள் ஆர்டர்கள் கொடுப்பதன் மூலமாக 5 மாத காலம் விசைத்தறி தொழில் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மீதி இருக்கிற ஏழு மாதங்கள் விசைத்தறிக்கு பெரிய ஆர்டர்கள் கிடையாது லாக் டவுன் வந்த காரணத்தினால் விசைத்தறி ரகங்கள் ஏற்றுமதிக்கு செல்வது நின்று போய்விட்டது.
அரசு தான் அதை கவனித்தாக வேண்டும். தேர்தலில் மீண்டும் கொமதேக நாமக்கல்லில் பே்டியிடுமா, எந்த கூட்டணி என்ற கேள்விக்கு, அதிமுக, திமுக இதுவரை தங்களிடம் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்றார். 2014 இல் வளர்ச்சியை முன்னிறுத்தி பிஜேபி தேர்தலை சந்தித்தது. ஆனால் 2014-க்கு பிறகு வளர்ச்சி என்கிற பேச்சை விட்டு விட்டார்கள். மதம் சார்ந்த அரசியலை தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் மக்களுடைய உணர்வுகளை தூண்டி அரசியல் செய்கிற அந்த மலிவான அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலை ஆக்கபூர்வமான அரசியல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | கோவை: நகைக்கடை கொள்ளையில் டிவிஸ்ட்... பணம், நகைகளை சுருட்டிய தங்கை கணவர்.!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ