விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் உறங்க போய்விட்டார்- புதிய தமிழகம் கிருஷ்ணசாமி விமர்சனம்

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் உறக்கத்திற்கு சென்று விட்டார் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 8, 2024, 11:25 AM IST
  • வரும் தேர்தலில் புதிய தமிழகம் யாருடன் கூட்டணி?
  • இன்னும் முடிவெடுக்கவில்லை என அறிவிப்பு
  • விஜய் தூக்கப்போய்விட்டார் என கிருஷ்ணசாமி விமர்சனம்
விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் உறங்க போய்விட்டார்- புதிய தமிழகம் கிருஷ்ணசாமி விமர்சனம் title=

புதிய தமிழகம் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இல்லத்தில் நடைபெற்றது. அப்போது, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்தித்தார்.‌ அப்போது பேசிய அவர், புதிய தமிழகம் கட்சியின் கூட்டணி குறித்து முடிவெடுக்க முழு அதிகாரம் தனக்கு கொடுத்து இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார். 

வலுவான கூட்டணி என்றால் எண்ணிக்கையில், கொள்கை அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், அதிகபட்சம் 2-3 தொகுதிகள் கேட்பதாகவும் தெரிவித்தார். 
அகல கால் வைக்க விரும்பவில்லை என்ற கிருஷ்ணசாமி, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி என சொல்வதற்கு இடமிருக்கா என்பது தெரியவில்லை என்றும், அதிமுக அதிலிருந்து பிரிந்து விட்டதால், புதிய கூட்டணி உருவாக தான் வாய்ப்பு என்றும் தெரிவித்தார். தற்போது அரசியலில் புதிய சூழல் உருவாகி உள்ளதாகவும், பாஜக - அதிமுக கூட்டணி என்பது காலம் கடந்துவிட்டது என்றும் கிருஷ்ணசாமி கூறினார். ஏப்ரல் மாதம் தான் தேர்தல் என்பதால் இன்னும் நேரம் உள்ளதால் கள ஆய்வு உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பின் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும் படிக்க | இரட்டை இலை சின்னம் மீண்டும் முடங்கும் என ஓபிஎஸ் அணி பகிரங்க எச்சரிக்கை 

யாருடைய கூட்டணி என்று எந்த முடிவுக்கும் இதுவரை தங்கள் கட்சி வரவில்லை என்றார்.  தமிழ்நாட்டில் இப்போது மூன்று அணிகள் இருப்பதால், அதில் வெற்றிக் கூட்டணியில் இடம் பெறுவோம் என கிருஷ்ணசாமி கூறினார். நாடாளுமன்றத்தில் வலுவாக தமிழகம் சார்பில் குரல் கொடுக்க வேண்டும் என்றும்,  தமிழகத்திற்கு எந்த நலனும் வந்து சேரவில்லை என்றும் குற்றச்சாட்டினார். நல்லது யார் செய்தாலும் பாராட்டி உள்ளதாகவும், பகை உணர்வோடு எதிரி தன்மையுடன் விமர்சனம் செய்வதில்லை என்றவர், நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என சொல்ல தேவையில்லை என்றார். 

நாடாளுமன்றத்தில் முக்கியமான விஷயத்தை டி.ஆர்.பாலு பேசும்போது, அதனை திசைதிருப்பும் வகையில் எல்.முருகன் பெசியது சரியில்லை என்றும் கிருஷ்ணசாமி கூறினார். மேலும், தமிழ்நாட்டிற்கு பிரதமர் வரும்போது அழைப்பு இருந்தால் நேரில் சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என அரசியல் கட்சி ஆரம்பித்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, அவர்கள் கட்சி ஆரம்பித்தவுடன் உறக்கத்திற்கு சென்று விட்டார்கள் எனவும், எழுந்திருக்கும் பொழுது அதைப் பற்றி பேசுவோம் என பதிலளித்தார்.

மேலும் படிக்க | அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மேடையிலேயே நேருக்கு நேராக கேஎன் நேரு வைத்த கோரிக்கை.!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News