kumbabishegam: பக்தர்கள் இன்றி பக்தியுடன் வடபழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு

சென்னை வடபழனி முருகன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்... காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வு நடைபெறும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 23, 2022, 09:59 AM IST
  • வடபழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு!
  • பக்தர்கள் இன்றி கும்பாபிஷேகம்
  • நேரலையில் நிகழ்ச்சி ஒளிபரப்பு
kumbabishegam: பக்தர்கள் இன்றி பக்தியுடன் வடபழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு title=

சென்னை: வடபழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்று வருகிறது. வார இறுதி நாளான இன்று கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால்,  பொதுமக்கள் அனுமதியின்றி குடமுழுக்கு நடைபெற்று வருகிறது.

காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வு நடைபெறுகிறது. பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சியை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Image

சென்னை வடபழனி முருகன் கோயில் (Lord Muruga) உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு நடைபெறும் கும்பாபிஷேகத்தை நேரில் காண்பதற்காக பலரும் ஆவலாக இருந்தனர். 

இதற்கு முன்னதாக, கடந்த 2007ஆம்ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு தற்போது ஆலயம் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது.

கோயிலுக்குள் 108 குண்டங்களுடன் யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. கங்கை, யமுனை என பல புனித நதிகளில் இருந்தும் தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, ராமேஸ்வரம், அறுபடை முருகன் கோயில்கள் என 15 இடங்களில் இருந்தும் புண்ணிய தீர்த்தம் கொண்டு வரப்பட்டன.  

கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமையன்று தொடங்கிவிட்டது. எனவே, இன்று கலந்துக் கொள்ள முடியாத பக்தர்கள், வியாழனன்றே கோவிலுக்கு அதிக அளவில் வந்து கடவுளை தரிசித்தனர்.

ALSO READ | பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா

1890ம் ஆண்டு எளிய ஓலைகூரைக் கொட்டகையுடன் கட்டப்பட்ட இந்தக் கோயில் மிகவும் பிரசித்து பெற்ற ஆலயம் ஆகும்.  கோவிலின் உட்பிரகாரத்தில் மூலவராக இருக்கும் முருகன் (Lord Muruga) நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். 

வரசித்தி விநாயகர், சொக்கநாதர் சிவன், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் என பல சன்னதிகள் இந்தக் கோவிலில் உள்ளது.  இங்கு தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி சன்னதிகளும் உள்ளன.

இந்த ஆலயத்தில் முருகன், காலில் பாதரட்சைகளுடன் காட்சியளிக்கிறார். நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய்க்கென்றும் ஒரு தனிச் சன்னதி இருக்கிறது. 

ALSO READ | முருகன் கோவிலுக்கு வெள்ளிக் கவசங்கள், தங்கத் கண் மலர்கள் வழங்கிய சசிகலா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News