குரங்கணி தீவிபத்து: 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

குரங்கணி தீவிபத்து குறித்த விசாரணை அறிக்கையை 4 வார காலத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரவு!

Last Updated : Jul 17, 2018, 02:06 PM IST
குரங்கணி தீவிபத்து: 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு! title=

குரங்கணி தீவிபத்து குறித்த விசாரணை அறிக்கையை 4 வார காலத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரவு!

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் டிரக்கிங் சென்ற 36 பேர் அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கியதில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை நடத்த வேளாண்மை துறையின் முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட அதுல்ய மிஸ்ரா, அந்த விசாரணை அறிக்கையை நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தாக்கல் செய்தார் அதுல்ய மிஸ்ரா. இந்த அறிக்கை 125 பக்கங்கள் கொண்டதாக இருந்தது.

வனத்துறையினரின் கவனக்குறைவும், முறையான பயிற்சி இல்லாதவர்கள் மலையேற்றத்திற்கு சென்றதும் தான் விபத்துக்கு காரணம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று இந்து தொடர்பான வழக்கை முடிவுக்கு கொண்டு வத்து தேசிய பசுமை தீர்ப்பாயம். 

அதில், விசாரணை அதிகாரியின் அறிக்கையின்படி வழிகாட்டு நெறிமுறைகளை பரிசீலித்து நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும், குரங்கணி தீவிபத்து குறித்த விசாரணை அறிக்கையை 4 வார காலத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

 

Trending News