10ஆம் பொதுத்தேர்வு இன்று தொடக்கம்! மாணவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து..

10th Public Exam Starts Today : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, இன்று தொடங்கவுள்ளதை ஒட்டி, தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Mar 26, 2024, 08:23 AM IST
  • 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம்
  • மொழிப்பாட தேர்வு நடைபெறும்
  • மாணவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
10ஆம் பொதுத்தேர்வு இன்று தொடக்கம்! மாணவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து.. title=

10th Public Exam Starts Today: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்குகிறது. இதையொட்டி, பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று, மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பொதுத்தேர்வுகள், இன்று (மார்ச் 26, 2024) தொடங்குகிறது. இந்த தேர்வுகள், இன்று முதல் வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தேர்வின் முதல் நாளான இன்று, தமிழ் மற்றும் பிற மொழிப்பாட தேர்வுகள் நடைபெற இருக்கிறது. 

இந்த பொதுத்தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 12 ஆயிரத்து 616 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சுமார் 4 லட்சத்து 57 ஆயிரத்து 525பேர் எழுத உள்ளனர். மொத்தம் 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் தேர்வு எழுதுவதாகவும், ஒரு மூன்றாம் பாலினத்தவர் தேர்வு எழுத உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் இன்று நடைபெற இருக்கும் பொதுத்தேர்வை எழுத இருக்கின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் மட்டுமன்றி, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்களும், 235 சிறை வாசிகளும் இந்த பொதுத்தேர்வை எழுத உள்ளனர். இந்த பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற இருக்கிறது. 

மேலும் படிக்க | அரசியலுக்கு வந்ததற்கான காரணம் என்ன? தங்கர் பச்சான் பேட்டி!

முதலமைச்சர் வாழ்த்து:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நேற்று மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து செய்தியை பதிவிட்டிருந்தார். அதில், அவர் “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best” என்று குறிப்பிட்டிருந்தார். 

விஜய் வாழ்த்து:

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கிய நடிகர் விஜய், தற்போது சமூக ரீதியாக நடக்கும் விஷயங்கள் குறித்து ஆக்டிவாக தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இன்று பொதுத்தேர்வு எழுத இருக்கும் பத்தாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துகள் கூறி நேற்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். 

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், அனைவரும் நல்ல மதிப்பெண்களை பெற, வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறியிருக்கிறார். 

அண்ணாமலை வாழ்த்து:

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மாணவ-மாணவியருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். 

அவர், “மாணவச் செல்வங்கள், பயமின்றித் தேர்வுகளை எழுதி, மேல்நிலைக் கல்வியில் தங்கள் திறமைக்கேற்ற பாடப்பிரிவினைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம், இந்தப் பொதுத் தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

மேலும் படிக்க | 6 பவுன் தங்கச் சங்கிலி பரிசு கொடுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ்! அதிர்ஷ்டம் யாருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News