12th Exam : 12ஆம் வகுப்பு முதல் தேர்வு கடினமாக இருந்ததா? எளிதாக இருந்ததா?

12th Board Exam 2024 How Was Today's Tamil Question Paper : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இன்றைய பாடத்தேர்வு எப்படியிருந்தது? இதோ முழு விவரம்!  

Written by - Yuvashree | Last Updated : Mar 1, 2024, 03:38 PM IST
  • 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது
  • இன்று தமிழ் தேர்வு நடைப்பெற்றது
  • இன்றைய தேர்வு வினாத்தாள் எப்படியிருந்தது?
12th Exam : 12ஆம் வகுப்பு முதல் தேர்வு கடினமாக இருந்ததா? எளிதாக இருந்ததா?  title=

12th Board Exam Language Question Paper : தமிழகம், மற்றும் புத்துச்சேரியில் இன்று (மார்ச் 1) 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இதில், மொத்தம் 7,534 பள்ளிகளில் இருந்து சுமார் 7.72 லட்சம் மாணவ மாணவியர் பொதுத்தேர்வு எழுதினர். 4.13 லட்சம் மாணவர்களும், 3.52 லட்சம் மாணவர்களும் பொதுத்தேர்வினை எழுதினர். பள்ளிகள் மூலமாக மட்டுமல்லாது, சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் மூலமாக 21ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனித்தேர்வர்களும், 125 சிறைவாசிகளும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதினர். 

இன்றைய தேர்வு:

பொதுத்தேர்வின் முதல்நாளான இன்று, தமிழ் மொழித்தேர்வு நடைப்பெற்றது. தேர்விற்கான ஹால் டிக்கெட்டுகள் முன்கூட்டியே மாணவர்களுக்கு இணைய வழியே கொடுக்கப்பட்டதை ஒட்டி, அவர்கள் தங்களது பள்ளிகளின் வாயிலாக அதனை பெற்றுக்கொண்டனர். அதனை இன்றைய தேர்வுக்கும் பயனபடுத்திக்கொண்டனர். இன்று நடைப்பெற்ற தேர்வில், மாணவர்கள் அவர்களின் விவரங்களை தேர்வு கண்காணிப்பாளர் சரிபார்த்த பிறகு தேர்வரைக்குள் அனுமதிக்கப்பட்டனர். 

10 மணிக்கு தேர்வரைக்குள் சென்ற பிறகு, அவர்களுக்கு வினாத்தாள் கையில் கொடுக்கப்பட்டு 10 நிமிடங்கள் வினாத்தாளை படிப்பதற்கான நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 5 நிமிடங்கள் விவரங்களை சரிபார்ப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, 10:15 மணிக்கு விடைத்தாள் காெடுக்கப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுத ஆரம்பித்தனர். இத்தேர்வு, 3 மணி நேரம் கழித்து, 1:15 மணியளவில் முடிக்கப்பட்டது. 

வினாத்தாள் எப்படியிருந்தது? 

வழக்கமாக, மொழி பாடத்தேர்வுகள் எப்போதும் எளிதாக இருக்கும் என மாணவர்கள்-ஆசிரியர்களிடையே கருத்து இருந்து வந்தது. சமயங்களில், அவர்கள் நினைத்ததற்கு மாறாக, மொழிப்பாட தேர்வுகள் கடினமாகவும் இருந்துள்ளன. ஆனால், இன்றைய தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வு எழுதி முடித்து வெளியே வந்த மாணவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருக்கின்றனர். அதன்படி, இன்றைய தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் எதுவும் வெளியிலிருந்து கேட்கப்படவில்லை என்றும், அனைத்தும் புத்தகத்தில் இருந்த வினாக்கள்தான் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | ஆன்லைன் சூதாட்டம்: உச்ச நீதிமன்றத்தில் விரைவாக தடையாணை பெற அன்புமணி வலியுறுத்தல்

அடுத்த தேர்வு என்ன? 

தமிழ் தேர்வை அடுத்து, மார்ச் 5ஆம் தேதி ஆங்கில மொழித்தேர்வு நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் இடையேயும் மூன்று முதல் நான்கு நாட்கள் விடுமுறை இருக்கும் வகையில் தேர்வு அட்டவனை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

ஆல்-தி-பெஸ்ட் சொன்ன அரசியல் கட்சி தலைவர்கள்:

புதிதாக அரசியல் கட்சியினை தொடங்கிய நடிகர் விஜய் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். அனைவரும் எந்த பயமும் இன்றி தேர்வினை எதிர்கொள்ள வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக்கொண்டனர். 

தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க சுமார் 3,200 பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுமார் 43,200 பேர் தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக பணியில் ஈடுபட்டுள்ளனர். 

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி நிறைவடைய உள்ளது.10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, இம்மாதம் 26ல் தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவடைய உள்ளது. 

மேலும் படிக்க | ரூ. 200 கோடி மதிப்பிலான போதைப்பொருள்... மதுரையில் பிடிப்பட்ட மெத்... அதிர்ச்சியில் அதிகாரிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News