அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 2, 2019, 04:32 PM IST
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் title=

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் 

லட்சதீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதுவும் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மற்றபடி அடுத்து ஐந்து நாட்களுக்கு வானிலை வறட்சியுடன் தான் காணப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி ஆகவும் இருக்கும். சென்னையை பொறுத்து வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 15 செ.மீ மழையும், குன்னுரில் 11 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. 

Trending News