நீலகிரியில் விற்பனையாகும் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்

நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் மே 15ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 25, 2022, 07:58 PM IST
  • மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ10க்கு விற்பனை
  • பாட்டிலை திரும்ப செலுத்தினால் பணம் திரும்ப ஒப்படைப்பு
  • மே 15ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் அமல்
நீலகிரியில் விற்பனையாகும் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்  title=

வனபாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு பின் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது.பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால் விலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்க இதுசம்பந்தமாக திட்டம் வகுக்க வேண்டும் எனவும் தவறினால் மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

liquor bottle buyback scheme

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மே 15ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் அமல்படுத்த அரசு ஒப்புதல் அளித்ததாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகலமலை, டாப் சிலிப் போன்ற மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் ஜூன் 15 ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க | சுற்றுச்சூழல், வன பாதுகாப்பிற்கான தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள்

liquor bottle buyback scheme

மசினகுடியில் தனியார் ஹோட்டல்கள் மதுபானங்களை பாட்டிலுடன் விற்பனை செய்வதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விதிமீறல் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து ஜூன் 30 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அன்றைய தினத்துக்குத் தள்ளிவைத்தனர்.

மேலும் படிக்க | போலீஸ் தாக்கியதால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாக புகார்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News