Live: ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச் சடங்கு; அதிமுக பொதுக்குழு; மழை நிலவரம்; IND vs AUS அப்டேட்ஸ்
Tamil Nadu Today Latest News Live Updates: உள்ளூர், மாநில, தேசிய, விளையாட்டு, சினிமா, அரசு திட்டங்கள் என இன்றைய (டிச. 15) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Tamil Nadu Today Latest News Live Updates: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு (EVKS Elangovan Funeral) இன்று மாலை நடைபெறுகிறது. அவரது இறுதி ஊர்வலம் இன்று பிற்பகலில் தொடங்கும். தொடர்ந்து மாலை மணப்பாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் இறுதிச் சடங்கு செய்யப்படும் என கூறப்படுகிறது.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் (AIADMK Committee Meeting) இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
பார்டர் - கவாஸ்கர் கோப்பை (Border Gavaskar Trophy) தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா (India vs Australia) அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் காபா நகரில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டு மழையால் தடைப்பட்ட நிலையில், இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் இதுவரை எவ்வித மழை குறுக்கிடும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், உள்ளூர், மாநில, தேசிய, விளையாட்டு, சினிமா, அரசு திட்டங்கள் என இன்றைய (டிச. 15) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Latest Updates
முட்டை பச்சையாக உடைத்து ஏன் சாப்பிடக்கூடாது?
முட்டை பச்சையாக உடைத்து சாப்பிடக்கூடாது... விபரீத சிக்கல் - என்ன தெரியுமா?
தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு
குளிர்காலத்தில் தலைமுடி பிரச்சனையை ஈஸியாக டீல் செய்ய டிப்ஸ்..!
விசிக-வில் இருந்து ஆதவ் அர்ஜூனா விலகல்...
விசிக-வில் இருந்து ஆதவ் அர்ஜூனா விலகல்... திருமாவளவன் மீது வைத்த முக்கிய குற்றச்சாட்டு
தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை ஏற்கும் தமிழ்நாடு அரசு
10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை ஏற்கும் தமிழ்நாடு அரசு
புத்தாண்டு ராசிபலன் 2025 :
புத்தாண்டு ராசிபலன் 2025 : கஜலட்சுமி யோகம்... 6 ராசிகளுக்கு அடித்தது பம்பர் லாட்டரி
கேரள பம்பர் லாட்டரி டிக்கெட்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேரள பம்பர் லாட்டரி டிக்கெட் இன்னும் விற்பனைக்கு வராதது ஏன்?
சாக்லெட்டுக்கு நடுவில் சிக்கன் டிக்கா மசாலா!
புது வருடத்தை கொண்டாட 5 சுற்றுலா தலங்கள்!!
Year Ender 2024 - டாப் 6 இணையதளங்கள்
ஆதவ் அர்ஜுனாவிற்கு வார்னிங் கொடுத்த திருமா!
வார ராசிபலன்: அடுத்த வாரம் ‘இந்த’ 4 ராசிகளுக்கு செம லக்!
அடுத்த வாரம், எந்த ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்கப்போகிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க நயன்தாரா ‘இதை’ குடிப்பாராம்!
பாராசிட்டமால் மாத்திரை பக்க விளைவுகள்
பாராசிட்டமால் மாத்திரை அடிக்கடி சாப்பிடுவீர்களா.... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
EPFO புதிய விதிகள் விபரம்
PF Claim... EPFO புதிய விதிகள் கூறுவது என்ன... முழு விபரம் இதோ
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்
ரோஹித் சர்மா செய்த மிகப்பெரிய தவறுகள்... இக்கட்டான நிலையில் இந்திய அணி - இனி மீள வழி இருக்கா?
மேற்கு வங்காளம் செய்திகள்
மேற்கு வங்க அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி. மாதச் சம்பளம் ரூ.3,000 அதிகரிப்பு. ஒப்பந்த ஊழியர்களின் சம்பளமும் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. (முழு விவரம்)
கேரளா பம்பர் லாட்டரி
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேரள பம்பர் லாட்டரி டிக்கெட் இன்னும் விற்பனைக்கு வராதது ஏன்?
19 வயது நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட ரஜினி!
EPFO அப்டேட்
PF பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்க... டெபிட் கார்ட் போதுமா? தனி கார்ட் வருமா? புதிய அப்டேட்
2024ல் ரசிகர்களை அழ வைத்த 7 படங்கள்!!
2024ல் வெளியான சில படங்கள் நம்மை அழவைத்ததாக இருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
பிக்பாஸ் 8: டபுள் எவிக்ஷனில் வெளியேறிய சத்யா-தர்ஷிகா!
பொங்கல் 2025 சிறப்பு பரிசு தொகுப்பு
பொங்கல் பரிசு 1000 ரூபாய்? ரேஷன் பயனாளர்களுக்கு நல்ல செய்தி... விரைவில் டோக்கன் விநியோகம்
2025ம் ஆண்டில் கோடி நன்மைகளை பெறும் 5 ராசிகள்
குரு பெயர்ச்சியும் கஜகேசரி யோகமும்... 2025ம் ஆண்டில் கோடி நன்மைகளை பெறும் 5 ராசிகள்
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை
மறைந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருான ஈவிகேஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Crime News: கோவில்பட்டி சிறுவன் கொலை - முழு பின்னணி
மக்களவையில் அரசியலமைப்பு சட்டம் மீதான சிறப்பு விவாதம்
வளர்ச்சியடைந்த இந்தியா... கனவை அடைய இந்த 11 விஷயங்களும் முக்கியம் - பிரதமர் மோடி போட்ட பட்டியல்!
வெல்லம் கலந்த பால் - ஆரோக்கிய நன்மைகள்
படுக்கைக்கு செல்லும் முன் இதை குடிங்க... அடுத்த முழு நாளும் சிறப்பாக இருக்கும் - மறக்காதீங்க!
இன்றைய ராசிபலன்
டிசம்பர் 15 ராசிபலன்: கார்த்திகை மாதம் முடிகிறது... இன்று யார் யாருக்கு நன்மை வரும்?
அதிமுக பொதுக்குழு: இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம்
வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் காலை முதலே கூட்ட அரங்கிற்கு தொண்டர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பொதுக்குழு அரங்க நுழைவு வாயிலில் அதிமுகவினர், பவுன்சர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனுமதி சீட்டு இல்லாததால் உள்ளே விட பவுன்சர்கள் மறுத்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இன்று ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச் சடங்கு
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று காலமானார். இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் முகலிவாக்கம் எல்&டி காலனி பகுதியில் அமைந்துள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. பிற்பகலில் இறுதி ஊர்வலம் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம்
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.
முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் குறித்த பணிகளை தொடங்க இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 3,500 பேர் இதில் பங்கேற்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.