LIVE: வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி -வானிலை மையம் எச்சரிக்கை!

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 9, 2021, 08:21 PM IST
Live Blog

கடந்த 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டாவது நாளாக நேற்றும், நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். 

இதற்கிடையில் தற்போது திருநெல்வேலி, கோவை உட்பட 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

9 November, 2021

  • 17:30 PM

    பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை:
    கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (நவம்பர்10) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.

  • 16:15 PM

    வெள்ள பாதிப்பு தொடர்பான புகாருக்கு வாட்ஸ் அப் எண்கள்:

    சென்னை மாநகராட்சியில் மழை வெள்ள பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு கூடுதலாக மூன்று வாட்ஸ் அப் எண்கள் அறிவிப்பு.
    9445025819, 
    9445025820, 
    9445025821.

  • 15:45 PM

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் உணவு விநியோகம் செய்த முதல்வர்:
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை மற்றும் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தார். நகரின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு விநியோகம் செய்தார்.

     

  • 14:45 PM

    5 ஏரிகளும் நிரம்பின:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளும் தொடர் மழை காரணமாக நிரம்பி உள்ளன. இந்த 5 ஏரிகளில் இருந்தும் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

  • 14:30 PM

    செல்பி எடுக்க செல்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள்:

    மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், ஆற்றிற்கு குளிக்கச் செல்வது செல்பி எடுக்க செல்வது ஆகியவற்றை தவிர்க்குமாறு பொதுமக்களை சேலம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

  • 11:30 AM

    தண்ணீரை வெளியேற்றும் பணிகள், மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

    தமிழகத்தில் பெய்து வரும் அதிகன மழை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். 538 குடிசைகள் சேதமடைந்துள்ளன, 4 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மழை தீவிரம் அடைந்தால் அதிக சேதம் ஏற்படும் என தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

    இன்று மழை குறைந்துள்ளதால் சென்னை மாநகராட்சி தாழ்வான பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றி வருவதாகவும், ராணுவம், NDRF, TN Fire மற்றும் பல அமைப்புகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். சென்னையில், மறுஆய்வு மற்றும் மீட்புப் பணிகளுக்காக கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

  • 11:15 AM

    அரசின் உத்தரவின்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர் கார்மேகம்

    மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பின் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - சேலம் ஈரோடு இடையே படகு போக்குவரத்து நிறுத்தம் -  அரசின் உத்தரவின்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறியுள்ளார். 

    மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை 119 அடியாக நிறுத்தி வைத்துள்ளதாகவும், நீர் வரத்தைப் பொறுத்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.

  • 10:45 AM

    கொட்டித்தீர்க்கும் மழை, விண்ணைத் தொடும் காய்கறி விலை: அல்லல்படும் மக்கள் 

     

    ரத்து குறைவு காரணமாக கோயம்பேடு வளாகத்தில் காய்கறிகளின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி விலை இருமடங்கு உயர்ந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் ரூ.70, பெரிய வெங்காயம் ரூ.60, பீன்ஸ் ரூ.70 , கேரட் ரூ. 90 , பீட்ரூட் ரூ. 40 , கத்தரிக்காய் ரூ.60 ரூபாய் என விற்பனையாகின்றன.

    உருளைக்கிழங்கு 40 ரூபாய், அவரைக்காய் 80 ரூபாய், பச்சை மிளகாய் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. கனமழையைத் தொடர்ந்து, வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

  • 09:45 AM

    இன்றைய பள்ளி கல்லூரி விடுமுறை

    சென்னை 
    திருவள்ளூர் 
    காஞ்சிபுரம்
    செங்கல்பட்டு
    நெல்லை
    தென்காசி
    மயிலாடுதுறை
    விழுப்புரம்

    பள்ளிகளுக்கு  மட்டும் விடுமுறை

    கடலூர்
    விருதுநகர்
    நாகை

  • 09:30 AM

    12 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Trending News