Tamil Nadu Top News Today, Tamil Nadu Latest News: தமிழ்நாட்டில் 13.06.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...
சோகம்! இளைஞர் பலி!
ஸ்ரீபெரும்புதூர் அருகே முன்னால் சென்ற லாரியை இருசக்கர வாகனத்தில் முந்திச் செல்ல முயன்ற இளைஞர் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி.
உ.பி.யில் எட்டு மாவட்டங்களில் வெடித்த வன்முறை:
உத்தரப்பிரதேச மாநிலத்தின் 8 மாவட்டங்களில் இருந்து 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் இது தொடர்பாக 9 மாவட்டங்களில் 13 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உ.பி. வன்முறை முழு விவரம்: 13 எப்ஐஆர்கள்; 316 பேர் கைது; வீடுகள் இடிப்பு!#UPViolence | #UttarPradesh | #Bulldozer | #YogiAdityanath | #AfreenFatima | #ZeeTamilNews |https://t.co/Nhv73xx4RQ
— Zee Tamil News (@ZeeTamilNews) June 13, 2022
நேஷனல் ஹெரால்டு வழக்கின் முழுப் பின்னணி:
நேஷனல் ஹெரால்டு வழக்கின் முழுப் பின்னணி#NationalHeraldcase #RahulGandhi #SoniaGandhi #Congress #Nehru #ZeeTamilNewshttps://t.co/mwpam5Ws7Q
— Zee Tamil News (@ZeeTamilNews) June 13, 2022
உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு:
ஒசூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழந்ததாக குற்றம் சாட்டிய உறவினர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஒரு ஹீரோயின் வாழ்க்கைல என்ன நடக்கும்? மனம் திறந்த நடிகை ரெஜினா
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை - வழக்கு தள்ளுபடி:
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தீயணைப்பு துறை வாகனத்தின் மீது மோதிய அரசு டவுன் பஸ்:
பொள்ளாச்சி: கோவை நான்கு வழி சாலையில் கிணத்துக்கடவு அருகே அதிவேகமாக வந்த தனியார் பஸ், அடுத்தடுத்து அரசு டவுன் பஸ் மற்றும் தீயணைப்பு துறை வாகனத்தின் மீது மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம். இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் விசாரணை.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் மாற்றம்:
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக ஜெயந்தி ஐஎஃப்எஸ் நியமனம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த உதயன் ஐஎஃப்எஸ் வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநராக நியமனம் சுற்றுச்சூழல் துறை இயக்குநராக தீபக் பில்கி ஐஎஃப்எஸ் நியமனம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா:
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ பதவி விலகியுள்ளார். இராஜினாமா கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக இலங்கை மின்சார சபையின் முன்னாள் பிரதித் தலைவர் நலிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தலைவர் பெர்டினாண்டோ பதவி விலகல்#SriLanka | #MMCFernando | #AdaniGroup | #PMModi | #GotabayaRajapaksa | #ZeeTamilNews | https://t.co/fMqxiXAqAv
— Zee Tamil News (@ZeeTamilNews) June 13, 2022
மீன்பிடிப்புக்கு தயாராகும் ராமேசுவரம் மீனவர்கள்
மீன்பிடித் தடைக்காலம் நிறைவடையதையொட்டி சீரமைப்பு பணிக்காக கரைக்கு ஏற்றப்பட்ட விசைப்படகுகளை கடலுக்குள் இறக்கும் பணியில் ராமேசுவரம் துறைமுகத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூரிலும் மேற்கு திசை காற்று காரணமாக 15ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முதல்நாளில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் படித்த அரசு நடுநிலைப்பள்ளியில் ரோஜாப் பூ, பலூன், இனிப்புகளுடன் வரவேற்றனர்.
ஆன்லைன் ரம்மி அவசரச் சட்டம்: நீதிபதி சந்துரு தலைமையிலான குழு இன்று முதல் ஆலோசனை
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தீவிர ஆலோசனை நடத்துகிறது.
மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகிக்க உத்தரவு: அமைச்சர் அன்பில் மகேஷ்
கோடை விடுமுறைக்கு பின் திங்கள்கிழமை ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, முதல் நாளில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை விநியோகிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்
டெல்லி செல்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து இன்று இரவு டெல்லி செல்கிறார்.
எண்ணும், எழுத்தும் கற்றல் திட்டம்: திருவள்ளூரில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படுகிறது.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.