பாஜக-விற்கு எதிராக கோஷமிட்டதாக தமிழக மாணவி சோபியாவின் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது!
நேற்றைய தினம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் குற்றாலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானத்தில் பயணித்தார். இந்த விமானந்தில் பயணித்த மாணவி 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என கோஷமிட்டார். தொடர்ந்து விமானத்தில் முழக்கமிட்ட படியே வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தமிழிசை சவுந்தரராஜன், விமானம் தூத்துக்குடி வந்து தரையிறங்கியதும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் மாணவி சோபியா நேற்று மாலை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படார். இதனையாடுத்து அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவரின் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யார் இந்த சோபியா?
ஸ்டர்லைட் போராட்ட களமான தூத்துக்குடியை சேர்ந்த சோபியா. கனடா நாட்டில் ஆராய்சி மாணவராக பயின்று வரும் இவர் தற்போது உடனடி போராளியாக சித்தரிக்கப்பட்டு வருகின்றார். ஆனால் அவர் நெடுநாட்களாக போராட்ட குரல்களை எழுப்பி வருகின்றார் என்பது தான் உன்மை.
நேற்று அவர் 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' கோஷமிடுவதற்கு முன்னதாகவே இந்த முடிவினை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவே இவரது தைரியத்தின் அடையாளம்.
தொடரந்து ஸ்டர்லைட் பிரச்சணைக்காக குரல் கொடுத்து வந்த இவர், நேற்றைய தினம் தான், தன் தந்தையுடன் விமானத்தில் பயணித்த போது அவர் உடன் பயணித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை பார்த்ததும், மீண்டும் குரல் கொடுத்துள்ளார் என்பது தான் உன்மை.
"If we were to talk about all of Vedanta’s crimes—and that’s what they are—this would be a very long podcast. In a just world, Anil Agarwal would be in prison but he knows how to game the system."
Pls read my interview on #SterliteProtest: https://t.co/NtMxx29bec @project_polis
— Lois (@Red_Pastures) July 26, 2018
தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சோபியாவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆதரவு குரல்கள் எழுந்து வருகின்றது.