தமிழக மருத்துவத்துறையில் வெளியான 106 புதிய அறிவிப்புகள்! தெரிந்துகொள்ளுங்கள்!

மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 106 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேரவையில் வெளியிட்டார்.   

Written by - RK Spark | Last Updated : Apr 18, 2023, 05:08 PM IST
  • அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கைகள் அமைக்கப்படும்.
  • உடற்கூறாய்வு மையங்கள் ரூபாய் 10.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • செவி எலும்பு அறுவை திறன் ஆய்வகம் ரூபாய் 2.40 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
தமிழக மருத்துவத்துறையில் வெளியான 106 புதிய அறிவிப்புகள்! தெரிந்துகொள்ளுங்கள்! title=

சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையின் பொழுது பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் இரண்டு முறை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் முதல் முறை சட்ட மசோதா நிறைவேற்றிய அனுப்பி வைத்திருந்ததை திருப்பி அனுப்பி வைத்தார்.  இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்பட்ட மசோதா குறித்து கடந்த மாதம் அது குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டிருந்தார் அதற்கும் பதில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது வரையிலும் ஆளுநர் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஆளுநருக்கும் சித்த மருத்துவத்திற்கும் என்ன சண்டையோ தெரியவில்லை? சித்த மருத்துவ பல்கலை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பியுள்ள நிலையில், அந்த  மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.  மேலும், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 106 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேரவையில் வெளியிட்டார். 

மேலும் படிக்க | அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் பணம்? சோதனை செய்த அதிகாரிகள்!

 

- காசநோய் பரிசோதனைக்கான நுகர்வு பொருள்கள் ₹20 கோடி மதிப்பீட்டில் வழங்கி அனைத்து வட்டார அளவிலும் ஒருங்கிணைந்த காச நோய் சேவைகள் வழங்கப்படும்.

- ஏழு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 8 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய கட்டண படுக்கைகள் அமைக்கப்படும். 

- கொடைக்கானல் கந்தர்வகோட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் உள்ள உடற்கூறாய்வு மையங்கள் ரூபாய் 10.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். 

- சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவி எலும்பு அறுவை திறன் ஆய்வகம் ரூபாய் 2.40 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். 

- எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகள் எலும்பு மஞ்சை மாற்று சிகிச்சை பிரிவிற்கு தேவையான அதிநவீன உபகரணங்கள் ரூபாய் 1.75 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும். 

- சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு ஆய்வகங்ளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் தர சான்றிதழ் பெறுவதற்காக நவீன ஆய்வக உபகரணங்கள் மற்றும் ஆய்வக கட்டமைப்பு ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். 

- மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு லேப்ரோஸ்கோபி,  எலும்பு மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் ரத்த சேமிப்பு அலகிற்கான உபகரணங்கள் ரூபாய் 1.58 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும். 

- தமிழ்நாட்டில் ரூபெல்லா தட்டம்மை நீக்குதல் என்ற இலக்கை 50 விழுக்காடு மாவட்டங்களில் நிறைவேற்றப்படும். 

- அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தூய்மை பணியாளர்களின் பயன்பாட்டிற்கென தனி அறை அமைத்து தரப்படும். 

- 100 இந்திய மருத்துவமுறை மருந்தங்கள் ரூபாய் 12.98 கோடி செலவில் ஆயுஷ் நல மையங்களாக தரம் உயர்த்தப்படும்.

மேலும் படிக்க | Tamil Nadu Weather: இன்னும் இரண்டு நாளைக்கு வறண்ட வானிலை.. கடும் வெயில் எச்சரிக்கை!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News