டிச., 31-க்குள் ஆர்.கே.,நகர் தேர்தல் நடத்த ஐகோர்ட் கெடு!!

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவு காரணமாக ஆர்கேநகர் தொகுதி காலியாக உள்ளது. இங்கு நடக்க இருந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. 

Last Updated : Nov 21, 2017, 02:39 PM IST
டிச., 31-க்குள் ஆர்.கே.,நகர் தேர்தல் நடத்த ஐகோர்ட் கெடு!! title=

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவு காரணமாக ஆர்கேநகர் தொகுதி காலியாக உள்ளது. இங்கு நடக்க இருந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில் ஆர்.கே.நகரில் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் கெடு விதித்துள்ளது. 

மேலும் போலி வாக்காளர்களை நீக்காமல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தக்கூடாது என திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில், ஆர்.கே.நகரில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தது. மேலும், நீக்கப்பட்ட போலி வாக்காளர்கள் குறித்த விவரம் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும் என உத்தரவாதம் அளித்தது.

Trending News