நாய்களை பராமரிப்பது ஐஐடி-யின் வேலையல்ல: சென்னை உயர் நீதிமன்றம்

ஐஐடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் ஐஐடி வளாகத்தில் இருப்பதாகவும், வீட்டில் பராமரிக்க முடியாதவர்கள் நாய்களை இங்கு விட்டுச் செல்வதால் நாய்கள் எண்ணிக்கை அதிகமாவதாகவும் தெரிவித்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 17, 2021, 09:38 PM IST
  • கடந்த 6 மாதங்களில் ஐஐடியில் 49 நாய்கள் இறந்துள்ளன.
  • நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் ஐஐடி வளாகத்தில் இருக்கின்றன.
  • நாய்களை பராமரிப்பது ஐஐடி-யின் வேலையல்ல: சென்னை உயர் நீதிமன்றம்.
நாய்களை பராமரிப்பது ஐஐடி-யின் வேலையல்ல:  சென்னை உயர் நீதிமன்றம் title=

ஐ.ஐ.டி. வளாகம், கைவிடப்பட்ட  நாய்களை விடும் பகுதியாக மாறாமல் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐஐடி (IIT) வளாகத்தில் உள்ள நாய்களை முறையாக பராமரிக்க கோரி  கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், கடந்த 6 மாதங்களில் ஐஐடியில் 49 நாய்கள் இறந்துள்ளதாகவும்,  கூட்டுக்குழு ஆய்வறிக்கையில் 14 நோய்வாய்ப்பட்ட நாய்கள் (Dogs) இருப்பதாகவும், அவற்றை கால்நடை மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றும், எத்தனை நாய்கள் இறந்துள்ளன என்பது குறித்து கணக்கீடு செய்யவேண்டும் என பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ALSO READ: பெரியாருக்கும் தமிழில் வாழ்த்து தெரிவித்த கேரள முதல்வர்!

ஐஐடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் ஐஐடி வளாகத்தில் இருப்பதாகவும், வீட்டில் பராமரிக்க முடியாதவர்கள் நாய்களை இங்கு விட்டுச் செல்வதால் நாய்கள் எண்ணிக்கை அதிகமாவதாகவும், இந்த நாய்களை பராமரிப்பதற்காக தனி இடம் அமைக்கப்பட்டு பராமரித்து வருவதாகவும் தெரிவித்தார். 

விலங்குகள் நல வாரியம் மற்றும் மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஐஐடியில் நாய்கள் முறையாக பராமரிக்கபடுவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, ஐ.ஐ.டி. வளாகம், உயிரியல் பூங்கா அல்ல என்றும், நாய்களை பராமரிப்பது ஐ.ஐ.டி.யின் பணியல்ல எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், கைவிடப்பட்ட நாய்களை விடும் பகுதியாக ஐஐடி மாறாமல் மாநில அரசு (TN Government) பார்த்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், ஐஐடி வளாகத்தில் ஏராளமான மான்கள் இருப்பதால், அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 19 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ALSO READ:அதிக வேலைவாய்ப்புள்ள கடல்சார் துறையில் சிறப்பு பயிற்சி: கடல்சார் பல்கலைக்கழகம் தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News