சீமைக்கருவை மரங்களை அகற்ற சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சீமைக்கருவை மரங்களை அகற்றுமாறு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2 மாதத்திற்குள் சிற்பபுச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 10% சீமை கருவேல மரங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும், ஒரு சில மாவட்ட ஆட்சியர்கள் கருவை மரங்களை அகற்ற முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும் சீமை கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு சார்பில் உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சீமைக் கருவை மரங்களின் பாதிப்பை உணர்ந்து 15 நாட்களில் மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை தேவை என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.