சமூக வலைதளங்களில் வெளியான VAO வினாத்தாள்கள்!

மதுரையில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு வினாத்தாள்கள் நள்ளிரவில் சமூக வலைதளங்களில் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  

Written by - RK Spark | Last Updated : Dec 4, 2022, 10:35 AM IST
  • இணையத்தில் கசிந்த வினாத்தாள்கள்.
  • 10ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை.
  • இந்த சம்பவத்தால் தேர்வாளர்கள் அதிர்ச்சி.
சமூக வலைதளங்களில் வெளியான VAO வினாத்தாள்கள்! title=

மதுரை மாவட்டத்தில்  காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருந்தது. இதற்காக கடந்த நவம்பர் 7ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 209 கிராம உதவியாளர் பணிக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட 11 தாலுகாவிற்குள் 22 தேர்வு மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்தறிவுத் தேர்வு நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க | முல்லை பெரியாறு அணை : ஆய்வு திடீர் ரத்து? - விளக்கம் அளிப்பாரா ஸ்டாலின்...!

விண்ணப்பத்திருந்த ஏராளமான பட்டதாரிகள் தேர்வு எழுத காத்திருந்த நிலையில், திடீரென நள்ளிரவில் கிராம நிர்வாக உதவியாளர் தேர்விற்காக மதுரை தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தேர்வு மையத்தில் இருந்த ஆங்கில திறனறிவுத் தேர்வுக்கான வினாத்தாள்களை சிலர் சமூக வலைதளங்களின் மூலமாக அனுப்பியதோடு மொத்த வினாத்தாள்களையும் பெற 10ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தற்போது சமூக வலைதளங்களில் வினாத்தாள்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மதுரை ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், கிராம உதவியாளர் தேர்வுக்கான வினாத்தாள்கள் மாற்றப்பட்டு காலை நடைபெறும் தேர்வில் புதிதாக தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள் கொடுக்கப்படும் என தெரிவித்தார். வினாத்தாள்களை கசிய விட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News