ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 16 லட்ச ரூபாய் இழந்த நபர் மாயம்!

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 16 லட்ச ரூபாய் இழந்த நபர் தற்கொலை செய்து கொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்து மாயமான சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 5, 2023, 09:19 PM IST
  • வினோத்குமார் என்கிற இளைஞர் ஆன் லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்.
  • ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 16 லட்சம் ரூபாய் வரை சுரேஷ் இழந்திருப்பதாக தகவல்.
  • சுரேஷ் தனது வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு வருவதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 16 லட்ச ரூபாய் இழந்த நபர் மாயம்! title=

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 16 லட்ச ரூபாய் இழந்த நபர் தற்கொலை செய்து கொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்து மாயமான சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. கே கே நகர் 14வது செக்டார் பகுதியயை சேர்ந்தவர் சுரேஷ் இவர் தனது மனைவி ராதா இரண்டு குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார், மேலும்  சுரேஷ் வடபழனி பகுதியில் அச்சு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுரேஷ் தனது வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு வருவதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார், 

ஆனால் நள்ளிரவு கடந்தும் சுரேஷ் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த மனைவி ராதா கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மேலும் சுரேஷ் வீட்டில் வைத்துச் சென்ற தான் அவரது செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் தோற்று விட்டதாகவும் அதனால் வாழ தகுதியற்றவன் தற்கொலை செய்தல் கொள்ளப் போகிறேன் என கடிதம் ஒன்று எழுதி அதை புகைப்படம் எடுத்து செல்போனில் வைத்து சென்றது தெரிய வந்தது.

மேலும் படிக்க | ஒரே நாடு, ஒரே கல்வி என ஒரே சாப்பாடு என்ற நிலை ஏற்படும் - அமைச்சர் பொன்முடி பேச்சு!

 இதனை அடுத்து சுரேஷின் மனைவி ராதாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 16 லட்சம் ரூபாய் வரை சுரேஷ் இழந்திருப்பதாக தெரிவித்தார் இதனை அடுத்து சுரேஷின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி அவரை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

நேற்று தாம்பரம் மாடம்பாக்கம் பகுதியில் வினோத்குமார் என்கிற இளைஞர் ஆன் லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை  தொடர்ந்து தற்போது மேல்மரு இளைஞர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தோற்று வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 'திராணியில் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்...' ஸ்டாலினை சீண்டும் அண்ணாமலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News