காஞ்சிபுரம் கோவில்களில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரம்-நெகிழியை தவிர்க்க புதிய ஏற்பாடு

பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட மீண்டும் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் கோவில்களை மஞ்சள் பை வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : May 12, 2023, 12:50 PM IST
  • காஞ்சிபுரத்தில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு.
  • காஞ்சிபுரம் மாவட்டத்தை நெகிழி அற்ற மாவட்டமாக மாற்ற ஏற்பாடு.
  • காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் மஞ்சள் பைகள் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு.
காஞ்சிபுரம் கோவில்களில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரம்-நெகிழியை தவிர்க்க புதிய ஏற்பாடு title=

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட மஞ்சள் பை இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் டாக்டர்  எம்.ஆர்த்தி,காஞ்சிபுரம் எம்பி க.செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்ற முயற்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்கிடும் வகையில் தமிழ் நாடு அரசு சார்பில், பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மஞ்சள் பை இயந்திரம்

காஞ்சிபுரத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றும் முயற்சிகளில் ஒரு பகுதியாக அம்மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விழிப்புணர்வு செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை நிறுத்தும் வகையில் மீண்டும் மஞ்சள் பை பயன்பாட்டினை கொண்டுவர பொதுமக்களிடையே  விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில் ₹10 ரூபாய்க்கு மஞ்சள் பைகளை வழங்கிடும் இயந்திரங்களை அமைத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | அதிமுகவில் பிடிஆர்? ஜெயக்குமாரின் தடாலடி பதில்

Meendum Manjappai

இயந்திரங்கள் திறப்புவிழா

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிக அளவில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில், வரதராஜ பெருமாள் திருக்கோவில் ஆகிய இரு இடங்களில் மஞ்சள் பை இயந்திரங்களை வைத்து திறப்பு விழா இன்று நடைபெற்றது.

மஞ்சள் பை இயந்திரம் திறப்பு விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்பி க.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மஞ்சள் பை இயந்திரங்களை துவக்கி வைத்தனர்.

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, துணை ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கு பிரகாஷ் மற்றும் மாசுக்கட்டுப்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தை நெகிழி அற்ற மாவட்டமாக மாற்ற வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த ஆண்டு முதல் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, மீண்டும் மஞ்சள் பை என்ற விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக தற்போது மஞ்சள் பை இயந்திரங்கள் அமைக்கப்பட்டது போல வேறு சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதற்கு முன்னர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மாராத்தான் ஓட்டமும் நடைபெற்றது. 

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம், அந்நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மஞ்சள் பை பயன்பாடு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த மாரத்தான் ஓட்டம்,  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது. இதில், கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பல்வேறுவ பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | "வாரிசு அரசியலே திராவிட மாடல்" வானதி சீனிவாசன் விமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News