பிளாஸ்டிக் மாற்றுப்பொருள்கள் தயாரிப்பவர்களுக்கு வரிச்சலுகை -ஜெயக்குமார்!

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப்பொருள்கள் தயாரிப்பவர்களுக்கு வரிச்சலுகை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!

Last Updated : Sep 29, 2018, 11:31 AM IST
பிளாஸ்டிக் மாற்றுப்பொருள்கள் தயாரிப்பவர்களுக்கு வரிச்சலுகை -ஜெயக்குமார்! title=

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப்பொருள்கள் தயாரிப்பவர்களுக்கு வரிச்சலுகை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான அனைத்து மாநில பிரதிநிதி GST கவுன்சில் கூட்டம் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் வீடியோ கான்ப்ரஸிங் மூலம் தமிழகம் சார்பில் பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவிக்கையில்...

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப்பொருள்கள் தயாரிப்பவர்களுக்கு வரிச்சலுகை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்டார்.

முன்னதாக அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. 

தமிழக அரசின் உத்தரவின்படி... பால், தயிர், மருத்துவ பொருட்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். இதர பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படும். மேலும் பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் கப்புகள், பாட்டீல்கள், கைப்பைகள் உள்ளிட்டவைகளும் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினை செயல்படுத்தும் விதமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த செப்டம்பர் 15-ஆம் நாள் முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

பிளாஸ்டிக் பொருட்களின் மீதான முழு தடையினை அமுல் படுத்து இன்னும் 3 மாதங்கள் மட்டுமே மீதம்முள்ள நிலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருள் தயாரிப்பு அவசியமாகியுள்ளது.

Trending News