பழங்குடியினருக்கு எந்த உதவியையும் அரசு செய்யும் - அமைச்சர் பேச்சு

பழங்குடியினருக்கு எந்தவகையான உதவியை தமிழ்நாடு அரசு செய்யும் அமைச்சர் கயல்விழி கூறியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 26, 2022, 11:21 AM IST
  • சென்னையில் பாடறியோம் படிப்பறியோம் நிகழ்ச்சி நடந்தது
  • ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த் நிகழ்ச்சியை அமைச்சர் தொடங்கிவைத்தார்
பழங்குடியினருக்கு எந்த உதவியையும் அரசு செய்யும் - அமைச்சர் பேச்சு title=

சென்னை பிராட்வேயில் அமைந்துள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் "பாடறியோம் படிப்பறியோம்" இசை குழுமம் மற்றும் யோகா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் பழங்குடியின பாடகர்களை மையப்படுத்திய துளிர் எனும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த இசை நிகழ்ச்சிகள் பல்வேறு பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. இதில் தமிழ்நாடு  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி அவர் தொடங்கி வைத்தார். 

பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்,  “பழங்குடியினரின் பேச்சுவழக்கு நம்மை போன்று இல்லாமல் வேறுபட்டு மாறுதலாக தனித்துவமாக இருக்கும். குறிப்பாக பழங்குடியினர்  பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காகவே இந்தத் துறை தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வகைகளில் நிதி ஒதுக்கப்பட்டும்வருகிறது. அப்படி ஒதுக்கப்பட்ட நிதியில் மிகவும் முக்கியமாக கல்விக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பழங்குடியினர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய எந்த வகையில் செயல்பட வேண்டுமோ அவை அனைத்தையும் முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு பல திட்டங்களை தீட்டி நிறைவேற்றி வருகிறது. நகரப்புறங்களில் முன்னேறிய அளவிற்குக்கூட கிராமப்புறங்களில் பலர் இன்றும் பெரும் அளவில் முன்னேற்றம் அடையவில்லை. 

மேலும் படிக்க | எடப்பாடி அஸ்திவாரத்தில் கை வைக்கும் ஓபிஎஸின் நெக்ஸ்ட் மூவ்!

அவற்றை சரி செய்யும் நோக்கிலேயே தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகர்ப்புற,  கிராமப்புற மக்களை ஒப்பிடும்பொழுது பழங்குடியினர்களின் பழக்கவழக்கங்கள் முற்றிலுமாக மாறுபட்டு இருக்கும் குறிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள சொல்லிய பொழுது அவர்கள் மறுத்த நிலையில் நாங்கள் அவர்களுக்கு தெளிவாக புரிய வைத்த பின்னரே அவர்கள் அதனை செலுத்துகின்றனர். 

குறிப்பாக பெண்களுக்கு கல்வி முக்கியம் என்பதை நாங்கள் செல்கின்ற பழங்குடியின மக்கள் வசிக்கும் இடமெல்லாம் வலியுறுத்தி வருகிறோம். ஏனெனில் முத்தமிழ் அறிஞர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். 

தற்போது முதல்வர் பழங்குடியின பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து செய்து வருகிறார். அதில் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 400 பழங்குடியினருக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள  பழங்குடியினருக்கும் அவர்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தர நமது தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அரசு தரப்பில் எந்த ஒரு உதவி தேவைப்பட்டாலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு தமிழக அரசு என்றும் செய்ய காத்திருக்கிறது. அவர்கள் எந்த துறையில் சிறந்து விளங்கினாலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News