எடப்பாடி அஸ்திவாரத்தில் கை வைக்கும் ஓபிஎஸின் நெக்ஸ்ட் மூவ்!

கட்சிக்குள் ஆதரவு இல்லை என்பதை உணர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அடுத்தகட்டமாக அதிமுக தொண்டர்களை சந்திக்க ஆயத்தமாகி வருகிறார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 26, 2022, 07:13 AM IST
  • ஓ.பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணம்
  • ஆதரவாளர்களை விரைவில் சந்திக்கிறார்
  • அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறுமா?
எடப்பாடி அஸ்திவாரத்தில் கை வைக்கும் ஓபிஎஸின் நெக்ஸ்ட் மூவ்!  title=

பொதுக்குழுவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். கட்சிக்குள் தனக்கு ஆதரவு இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அவர், இப்போதைக்கு கட்சிக்குள் தன்னுடைய இருப்பை எப்படியாவது நிலைநாட்டிவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். அதிமுகவில் இருக்கும் மூத்த தலைவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுவிட்டதால், டெல்லி மட்டுமே ஆதரவு கரம் கொடுக்க முடியும் என்பதை உணர்ந்து திடீரென டெல்லி விசிட் அடித்தார்.

அங்கு பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் பங்கெடுத்த அவர், பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இருப்பினும் முக்கிய தலைவர்களிடம் தன்னுடைய நிலைப்பாட்டையும், தனக்கு வேண்டியதையும் விலாவரியாக எடுத்துக் கூறியுள்ளார். இப்போதைக்கு அதிமுகவில் ஒற்றைத் தலைமை கூடாது என்கிற முடிவில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், ஜூலை 11 ஆம் தேதி நடக்கும் பொதுக்குழுவை தடுக்க வேண்டும், அதற்கான உதவிகளை டெல்லி செய்ய வேண்டும் என கேட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | களமிறங்கும் சசிகலா - ஓபிஎஸ்ஸின் டெல்லி மூவ்! எடப்பாடி முக்கிய ஆலோசனை

ஆனால், மத்திய மேலிடம் வெளிப்படையாக தங்களுடைய ஆதரவை தெரிவிக்க முடியாது என்பதை உணர்த்திவிட்டதாம். எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் தனக்கு இருக்கும் செல்வாக்கையும், தொண்டர்களின் பலத்தையும் நிரூபித்துவிட்டதையும் கவனித்திருக்கிறது மேலிடம். அதனால், பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பும் இருக்கும் நிலையில், உட்கட்சி பிரச்சனையில் தலையிட வேண்டாம் என்கிற முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், ஓபிஎஸ் ஓரங்கட்டப்படுவதையும் விரும்பாத மேலிடம், கட்சிக்குள் செல்வாக்கை அதிகரிக்கவும், தொண்டர்கள் பலத்தை காட்டவும் அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

பொதுக்குழு பிரச்சனையிலும் சாதகமான ஆலோசனைகளை பெற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் உற்சாகத்துடன் டெல்லியில் இருந்து சென்னை திரும்பியிருக்கிறார். அடுத்தக்கட்டமாக தென் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் அவர், கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்திக்க முடிவெடுத்திருக்கிறார். ஓ.பன்னீர்செல்வத்தின் அனைத்து மூவ்களையும் எடப்பாடி பழனிசாமி தரப்பும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. 

கடந்தமுறை பொதுக்குழு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் இருந்த அவர்களுக்கு, அடுத்த சில மணி நேரங்களில் நடந்த மேல்முறையீட்டு மனு விசாரணை, பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு ஆகியவற்றால் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கின்றனர். இதனால், இந்த முறை மிகவும் கவனமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவை திட்டமிட்டப்படி வெற்றிகரமாக நடத்த வேண்டும், அதற்கு தேவையான சட்ட ஆலோசனைகள், மத்திய மேலிடத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றும் முயற்சிகளையும் முடுக்கிவிட்டிருக்கிறார்களாம். 

மேலும் படிக்க | பிரதமர் மோடியை சந்திக்கும் ஓ.பி.எஸ்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News