தீ குளித்த 17 வயது காதலி... மரண வாக்குமூலத்தில் வெளியான திடுக்கிடும் காரணம்

தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட 17 வயது மாணவியின் மரண வாக்குமூலத்தில் காதலன் குறித்த திடுக்கிடும் உண்மை வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Aug 13, 2022, 03:56 PM IST
  • 17 வயது மாணவியுடன் பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்ட இளைஞர்
  • திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதால் மாணவி தற்கொலை
  • மரண வாக்குமூலத்தில் தெரிய வந்த உண்மையால் பெற்றோர் அதிர்ச்சி
தீ குளித்த 17 வயது காதலி... மரண வாக்குமூலத்தில் வெளியான திடுக்கிடும் காரணம் title=

தர்மபுரி அருகே அக்கமனஅள்ளி பகுதியில் உள்ள சின்னமாட்டுகடை கிராமத்தை சேர்ந்த முனியாண்டி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மகள் பவித்ரா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  இவர் சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த ஆண்டு  12ம் வகுப்பு முடித்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத பொழுது உடலில் மண்ணென்ணை ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். பிறகு அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டார் வநந்து பார்த்துள்ளனர். அப்போது பவித்ரா தீக்காயங்களுடன் கிடந்துள்ளார். 

பின்னர் பக்கத்துவீட்டார் ஆம்புலன்ஸை வரவழைத்து பவித்ராவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவித்ரா அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு மரணமடைந்தார்.

மேலும் படிக்க | 75வது சுதந்திர தினவிழா: மாரத்தான் போட்டி, எல்.முருகன் தொடங்கி வைத்தார்

இந்நிலையில் பவித்ரா உயிர் இழப்பதற்கு முன்பு தனது பெற்றோரிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அக்கமன அள்ளி பகுதியை சேர்ந்த  முனிரத்தினம் என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், அவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி பல முறை கற்பழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் காதலன் முனிரத்தினம் தன்னை ஏமாற்றிய காரணத்தினால் தற்கொலை முயற்சி செய்யததாகவும் மரணிப்பதற்கு முன்பு மாணவி பவித்ரா மரண வாக்குமூலம் தந்துள்ளார். பின்னர் அவர் உயிரிழந்தார்.

இந்த இளம் மாணவி மரணம் தொடர்பாக மதிகோன்பாளையம் காவல் நிலையத்தில் பவித்ராவின் பெற்றோர் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, மாணவி மரணம் அடைவதற்கு முன் பேசிய வீடியோ மற்றும் ஆடியோவை வைத்து  போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இன்று முனிரத்தினத்தை (26)  போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வத்தின் உத்தரவின் பேரில் போக்சோ சட்ட பிரிவின் கீழ் முனிரத்தினம் கைது செய்யப்பட்டு, நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க | Independence Day: மூவர்ணக் கொடியில் ஜொலிக்கும் கோல்கொண்டா கோட்டை

மேலும் படிக்க | பேரனுடன் சேர்ந்து லூட்டி அடிக்கும் ப்யூட்டி பாட்டி ராஜாமணி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News