சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் காணொலி காட்சி வழியாக நடைபெற்றது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதையொட்டி கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக (Dravida Munnetra Kazhagam) விரைவுப்படுத்தியுள்ளது. மேலும் விருப்பமனு கொடுத்த தொண்டர்களிடம் நேர்காணலையும் திமுக நடத்தி வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக வேட்பாளர்கள் தேர்வு குறித்தும், திருச்சியில் 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்கூட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் (Assembly Elections) நடைபெற உள்ளது. அதேபோல ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஐந்து மாநிலங்களில் பாதிவாகும் வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடைபெறும்.
ALSO READ | TN Assembly Elections: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது திமுக
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவாரத்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
திமுக (DMK) தரப்பில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு (Indian Union Muslim League) மூன்று இடங்களையும், இரண்டு தொகுதிகளை மனிதநேய மக்கள் கட்சிக்கும் (Manithaneya Makkal Katchi) ஒதுக்கியிருந்தது. தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வசிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு (Viduthalai Chiruthaigal Katchi) ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு (Pattali Makkal Katchi) 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் காணொலி காட்சி வழியாக நடைபெற்றது.
ALSO READ | TN Assembly Election இருக்கை பகிர்வு: DMK மற்றும் AIADMK முகாம்களில் என்ன நடக்கிறது?
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR