பொய் பிரசாரத்துக்கு முற்றுபுள்ளி வைத்த நீதிபதி - மு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்

மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதில் எந்த சந்தேகமும் இல்லை என்று முன்னாள் நீதிபதி சந்துரு தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 18, 2019, 08:49 PM IST
பொய் பிரசாரத்துக்கு முற்றுபுள்ளி வைத்த நீதிபதி - மு.க.ஸ்டாலின் மிசா கைதி தான் title=

சென்னை: நாட்டில் 1975 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, எமர்ஜென்சியை அறிவித்தார். அப்பொழுது தங்கலுக்கு ஆதரவாக இல்லாத அரசியல் தலைவர்களை அனைவரையும் மிசா சட்டத்தில் கைது செய்தனர். அப்பொழுது தமிழகத்தில் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் தற்போதைய திமுக தலைவராக இருக்கும் ஸ்டாலினும் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் எமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட வில்லை என சமூக வலைதளங்களில் எதிர் கட்சியினர் பரப்பி வருகின்றனர். இது பெரும் விவாததுக்கு உள்ளானது. அத்தோடு மட்டுமில்லாமல், அதிமுக கட்சியை சேர்ந்த, ஆளும் கட்சியின் அமைச்சரான மாஃபா பாண்டியராஜன், ஸ்டாலினின் தவறான செய்கைகளுக்காக தான் மிசாவில் கைது செய்யப்பாட்டார் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது பெரும் புயலைக் கிளப்பியது. இதற்கு திமுக தரப்பில் பெரும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. 

மாஃபா பாண்டியராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் என, அவரின் வீட்டின் முன்னால் போராட்டத்தில் திமுக தொண்டர்கள் ஈடுபட்டனர். மேலும் அவரது உருவ பொம்மையை எரித்தனர். இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், தொண்டர்கள் போராட்டம் நடத்த வேண்டாம் என கூறியதை அடுத்து, திமுகவினர் போராட்டதை கைவிட்டனர்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டாரா? இல்லையா? என்ற விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியது. மு.க.ஸ்டாலின் குறித்து பொய்யான செய்திகளை பரப்பும் கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இஸ்மாயில் ஆணையத்தில் இடம் பெற்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது, தமிழ்நாடு முழுவதும் மிசா சட்டம் மூலம் திமுகவினர் 450 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் முக்கியமான தலைவர்கள் முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, சிட்டி பாபு எம்.பி போன்றோர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தாக்கப்பட்டது உண்மை. ஸ்டாலின் என்ன காரணித்திற்காக உள்ள வைத்தார்கள் என்ற ஆதாரம் தேவையில்லை. ஸ்டாலின் மிசா கைதியாக வைக்கப்பட்டதுக்கு காரணம் திமுக கழகத்தை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கிலும், திமுக கழக தலைவர் குடும்பத்துக்கு மன ரீதியான மனஉளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் கைது செய்யப்பட்டார்கள். 

மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதில் எந்த சந்தேகமும் இல்லை என்று முன்னாள் நீதிபதி சந்துரு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், அரசியல் ரீதியாக விமர்சனம் செய்யும் போது, சரியான உண்மையான கருத்துகளை கூறி விமர்சனம் செய்யலாம். ஆனால் தவறான காரணத்தை கூறி தவறான பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என்று முன்னாள் நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.

Trending News