50, 60 ஆண்டுகளில் மனிதர்கள் வாழும் பகுதியாக மாறும் நிலா....

50, 60 ஆண்டுகளில் மனிதர்கள் வாழும் பகுதியாக நிலவும் செவ்வாயும் இருக்கும் என இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்துள்ளார்.

Last Updated : Aug 19, 2019, 10:54 AM IST
50, 60 ஆண்டுகளில் மனிதர்கள் வாழும் பகுதியாக மாறும் நிலா.... title=

50, 60 ஆண்டுகளில் மனிதர்கள் வாழும் பகுதியாக நிலவும் செவ்வாயும் இருக்கும் என இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த வெள்ளியங்காடு அரசு மேல் நிலைப்பள்ளியில் ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநரும் விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாத்துரை பங்கேற்றார்.

மத்திய அரசின் ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்ற மூன்று மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்., "செப்டம்பர் 7 என்பதை உலகமே எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்தியாவின் 130-கோடி மக்களும், நிலவிற்கு திரும்பவும் செல்ல வேண்டும் என்று நினைக்கும் உலக நாடுகளும் அந்த நாளை காண ஆவலுடன் காத்துள்ளனர். அதற்கு மேலும் நிலவை நோக்கி செல்லும் சந்திராயன் இரண்டு நிலவின் நீள்வட்டப்பாதையை ஈர்ப்பு விசையுடன் அடையும். அதன் பின்னர் விக்ரம் பிரக்யான் களங்கள் அதில் இருந்து விலகி மெதுவாக செப்டம்பர் 7-ல் நிலவை அடையும் வகையில் திட்டமிடபட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தயார் செய்யபட்டுள்ளன" என தெரிவித்தார்.

தொழில்நுட்ப ரீதியாக சவாலான காரியமாக இருந்தாலும், அனைத்து சோதனைகளும் முடிவடைந்துள்ளது. சந்திராயன் நிலவில் இறங்கும் அந்த 15 நிமிடத்திற்காக காத்திருக்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் நிலவும் செவ்வாயும் பூமியின் இன்னொரு தளமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்த அவர் அமெரிக்காவில் ஒரு கண்டம் மனிதர்கள் வசிக்கும் பகுதியாக உள்ளதோ அது போல் நிலவும் செவ்வாயும் பூமிவாழ் மனிதர்கள் வாழும் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்த 50, 60 ஆண்டுகளில் அது உருவாக வாய்ப்பு இருப்பதாக தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending News